விஎச்பிக்கு போலீஸ் போட்ட 23 நிபந்தனைகள்!
சென்னை:
ஜெயேந்திரர் கைது தொடர்பாக மைலாப்பூர் மாங்கொல்லையில் மாநாடு, பொதுக் கூட்டம் நடத்த 23 நிபந்தனைகளுடன் வி.எச்.பிக்குதமிழக போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து மைலாப்பூர் மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுப்பதாகக் கூறி விசுவஇந்து பரீஷத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடரப்பட்டது.
இந் நிலையில் பொதுக் கூட்டத்திற்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளதாக வி.எச்.பி. துணைத் தலைவர் வேதாந்தம் நிருபர்களிடம்கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து பாஜக, வி.எச்.பி. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து இயக்கங்கள் இந்திய அளவிலும், தமிழக அளவிலும்அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றன.
ஆனால் போலீஸார் உண்ணாவிரதம் நடத்தக்கூட அனுமதி மறுத்து வருகின்றனர். இந்து மதத்தை அழிக்க சிலர் திட்டமிட்டுசெயல்படுகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூட அஞ்சுகின்றனர்.
ஜெயேந்திரர் கைதைக் கண்டிக்கும் வகையில் மைலாப்பூர் மாங்கொல்லையில் வரும் 6ம் தேதி நடைபெற இருக்கும் இந்து சமுதாயபாதுகாப்பு மாநாட்டிற்கு 23 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த மாநாட்டில் வி.எச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிஉள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்று கூறினார்.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications