அரசு ஊழியர்கள்: ஊதியம் வழங்குவதில் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நிதி நெருக்கடி காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நிதித்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மத்திய அரசு ஊழியர்களின் 50 சதவீத அகவிலைப்படியைஅடிப்படை ஊதியத்துடன் இணைத்தது. அதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. இதன் விளைவாக பிப்ரவரி மாதம் 56மத்திய அரசு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ரூ.500 கோடிக்கு பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றநிதி ஆலோசகர்கள் கூட்டத்தில், இத்தகைய தட்டுப்பாடு ஏற்படலாம் என்று சில ஆலோசகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால்சம்பந்தப்பட்ட துறை அதை அலட்சியம் செய்துவிட்டது.

அதன் விளைவாக இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் லண்டன் சென்றுள்ள நிலையில்,இப்பிரச்சினை மன்மோகன் சிங்கின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் நிதித் துறை உயர் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார். அப்போத இப்பிரச்சினையை சமாளிப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அடுத்த மாதம் ஊதியம் வழங்குவதற்குத் தேவையான தொகை குறித்து இம்மாதம் 5ம் தேதியே தயாராக வேண்டும்.அப்போதுதான் பல்வேறு இடங்களில் ஒப்புதல்கள் கிடைத்த பிறகு உரிய தேதியில் ஊதியம் வழங்க முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+