அண்ணா சாலையில் ஓட ஓட விரட்டி வாலிபர் படுகொலை
சென்னை:
சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலையில் இன்று காலை வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலைசெய்யப்பட்டார்.
மயிலாப்பூர் ஸ்லேட்டர் புரத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். அவருக்கும் அப் பகுதியில் பூ விற்று வந்த சித்ரா என்பவருக்கும் காதல்ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வசித்து வந்தனர்.
அப் பகுதியில் குடிசைகள் அகற்றப்பட்டதால் ஜெயராமனுக்கு துரைப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய வீடு கிடைத்தது. அங்குசென்று இந்திராவுடன் குடும்பம் நடத்தினார் ஜெயராமன்.
ஜெயராமனுக்கு குடிப் பழக்கம் இருந்தது. இந் நிலையில் சித்ராவுக்கும், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்கும்கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. சித்ராவை ஜெயராமனிடமிருந்து பிரித்த முனுசாமி அவரை சிந்தாதிரிப்பேட்டைக்கு அழைத்துச்சென்று குடித்தனம் வைத்தார்.
இதனால் கோபமடைந்த ஜெயராமன், அண்ணா சாலை எல்லீஸ் சாலை அருகே வசித்து வந்த முனுசாமியை சந்தித்து தகராறுசெய்துள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் முனுசாமியை அவர் கத்தியால் குத்த முயன்றார்.
இதையடுத்து முனுசாமி அங்கிருந்து தப்பித்து ஓடினார். ஆனால், விடாமல் துரத்திய ஜெயராமன், அண்ணா சாலை சுரங்கப் பாதைவழியாக முனுசாமியை துரத்திச் சென்று, ரஹேஜா காம்பளக்ஸ் அருகே வைத்து சரமாரியாக குத்திக் கொன்றார்.
இதில் முனுசாமி அந்த இடத்திலேயே பிணமானார். இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகில்தான் திருவல்லிக்கேணி காவல்நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. எம்.எல்.ஏ விடுதியும் அருகேதான் உள்ளது.
பட்டப் பகலில், மக்கள் நெரிசல் அதிகம் உள்ள அண்ணா சாலையில் நடந்த இந்த பயங்கர சேஸிங் கொலை அப் பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications