சென்னையில் பள்ளி மாணவன் கடத்தல்: ஆள்மாறாட்டத்தால் பாதியில் விட்டு சென்றனர்
சென்னை:
சென்னையில் பட்டப் பகலில் பள்ளியின் வாசலில் இருந்து மாணவன் கடத்தப்பட்டுள்ளான். ஆள்மாறாட்டம் காரணமாக தவறானமாணவனைக் கடத்தியதால் அவனை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளது கடத்தல் கும்பல்.
கோடம்பாக்கம் சாமியார் மடம் பகுதியில் வசிக்கும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயலட்சுமியின் மகன் ராஜ்குமார் (15). இவர் கே.கே.நகரில் உள்ள பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம்போல் ஆட்டோவில் வந்து பள்ளியின் வாயிலில் இறங்கிய ராஜ்குமாரை அங்கு நின்றிருந்த மாருதி காரில்இருந்தவர்கள் நெருங்கினர். பின்னர் ராஜ்குமாரை வேனுக்குள் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பினர்.
வேன் சென்று கொண்டிருந்தபோதே உன் பெயர் விஜய் தானே என்று அக் கும்பலில் ஒருவன் கேட்டுள்ளான். அதற்கு தன் பெயர் ராஜ்குமார்என அவன் அம் மாணவன் பதில் தந்துள்ளான்.
இதையடுத்து செல்போனில் யாருடனோ பேசியுள்ளது அந்தக் கும்பல். அப்போது கடத்தத் திட்டமிட்டிருந்த சிறுவனுக்குப் பதிலாகராஜ்குமாரை கடத்திவிட்டதை உணர்ந்துள்ளது அக் கும்பல்.
இதையடுத்து அண்ணா சாலை கெயிட்டி திரையரங்கு அருகே ராஜ்குமாரை இறக்கிவிட்டுவிட்டு அக் கும்பல் தப்பிவிட்டது.
இதையடுத்து அந்த மாணவன் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்குச் சென்று தான் கடத்தப்பட்டதைக் கூறியுள்ளான்.
அந்தக் கும்பல் பயணித்த வெள்ளை நிற மாருதி காரில் நம்பர் பிளேட்டே இல்லை என்றும் ராஜ்குமார் கூறியுள்ளான்.
ராஜ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே அவனை ஏதாவது கும்பல் கடத்தியதா அல்லது பரீட்சைக்குபயந்து புருடா விட்டானா என்ற ரீதியிலும் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
வழக்கறிஞரான ராஜ்குமாரின் தாயார் விஜயலட்சுமியிடமும் விசாரணை நடக்கிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications