காவிரி: மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!
வேடசந்தூர்:
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமலாக்குவோம் என்று அரசியல்சட்ட உறுதிமொழியை கர்நாடகம் வழங்க வேண்டும் என மதிமுககோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக அரசு இந்த உறுதிமொழியை வழங்கச் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்றும்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரிக்கும் மதிமுக இக் கோரிக்கையை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையே கர்நாடகம் குப்பையில் தூக்கி வீசிவிட்ட நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள்இறுதித் தீர்ப்பும் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் வேடசந்தூரில் நடந்த மதிமுகவின் இரண்டு நாள் விவசாயிகள் மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய வைகோ கூறியதாவது:
நாட்டின் ஒற்றுமை, நாட்டின் நலனை கருத்தில் கொண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமலாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர்உணர வேண்டும்.
தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்துக்கும் பிரதமர் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இந்தத் திட்டத்தை வெகு வேகமாகசெயல்படுத்த மத்திய அரசு தவறுமானால் நாட்டின் ஒற்றுமையே கேள்விக்குறியாகிவிடும்.
கர்நாடகம் தனது ஏரிகளைத் தூர் வாரி வருகிறது. புதிய அணைகளையும் கட்டி வருகிறது. இது போன்ற திட்டங்களை தமிழக அரசுசெய்யத் தவறிவிட்டது.
தொடர் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மறுவழ்வு அளிக்க வேண்டும். இந்த ஏழைகுடியானவர்கள் கிராமங்களை விட்டு பிழைப்புத் தேடி வெளிமாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்கு இங்கேயேமறுவாழ்வு தர வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.
வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு உதவ வேலைக்கு உணவு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், அதைக் கூட மாநிலசர்க்கார் முறையாக அமல்படுத்தவில்லை. இத் திட்டத்தால் உண்டு பெருத்து வருவது காண்ட்ராக்டர்கள் தான்.
தன் அன்றாட உணவுக்கே தடுமாறும் அவல நிலையில் விவசாயி இருக்கிறான். அவனுக்கு இங்கு வேறு வேலைகளும் கிடைக்கவில்லை.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமலாக்குவோம் என்று அரசியல்சட்ட உறுதிமொழியை கர்நாடகம் வழங்க வேண்டும். இந்த உறுதிமொழியை கர்நாடகம் வழங்கும் என்று மத்திய அரசு உத்தரவாதம் தர வேண்டும். மத்திய அரசுக்கு நாங்கள் நிபந்தனை இல்லாத ஆதரவுதந்து வருகிறோம். ஆனாலும் எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
நதிகள் மாநிலங்களின் ஜீவாதார உரிமை. இதை எந்த ஒரு தனி மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. தேசிய நெடுஞ்சாலைகள்மாதிரி நதிகளையும் தேசிய மயமாக்க வேண்டும்.
விவசாயத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில்விவசாயத்துக்காக 37 சதவீத நிதி ஒதுக்கப்பட்டது. அது இப்போது 20 சதவீதத்தில் வந்து நிற்கிறது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications