ஆசிரியை மாயமான வழக்கு: 2 போலீஸார் சஸ்பெண்ட்!
கரூர்:
குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக் காவலர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மீனாட்சியை கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி முதல் காணவில்லை. தனது மனைவி காணாமல் போனதற்கு குளித்தலை அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன் கருணாகரன் ஆகியோரே காரணம் என்று மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம் போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் புகாரைக் கண்டு கொள்ளாததால், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள், போலீஸாரை சரமாரியாக விமர்சித்தனர், விசாரணை என்ற பெயரில் போலீஸார் விளையாடிக் கொண்டிருப்பதாக கடுமையாக சாடினர்.
இதைத் தொடர்ந்து டிஜிபி அலெக்சாண்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராக விளக்கம் அளித்தார்.
பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன் கருணாககரன், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரங்கநாதன், மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம், அவரது குடும்பத்தினர் ஆகியோரிடம் பல கட்டங்களாக விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் இன்று முதல் கட்ட விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தாக வேண்டும்.
இதற்கிடையே, மீனாட்சியின் கணவர் கொடுத்த புகாரை முதலில் பதிவு செய்த மறுத்த சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், தலைமைக் காவலர் ஆறுமுகம் ஆகியோரை கரூர் மாவட்டக் கண்காணிப்பாளர் அபின் தினேஷ் மோடக், தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் மேலும் சில அதிகாரிகளும் சஸ்பெண்ட் ஆவார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் அதிமுக எம்எல்ஏ பாப்பா சுந்தரத்தை காப்பாற்றுவதிலேயே போலீசார் அதிக அக்கறை காட்டி வருவதாகத் தெரிகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications