விஜய்குமாருக்கு பத்மஸ்ரீ!
சென்னை:
வீரப்பனைக் கொன்ற அதிரடிப்படையின் தலைவர் ஏடிஜிபி விஜய்குமார் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்குத் தரப்பட்ட பதவிஉயர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத் தகவலை சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்றுதெரிவித்தார்.
மேலும் இவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்க ஜெயலலிதா விடுத்த கோரிக்கையையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
அதிரடிப் படையினருக்கு ஒரு வீட்டு மனை, ரொக்கப் பரிசு மற்றும் ஒரு படி பதவி உயர்வை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.ஆனால், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இப்படி நினைத்த மாதிரியெல்லாம் பதவி உயர்வு தர முடியாது.
இதனால் விஜய்குமாருக்கு டிஜிபியாகவும், டிஎஸ்பிக்களாக இருந்த செந்தாமரைக் கண்ணன், சண்முகவேல் ஆகியோருக்குஎஸ்பிக்களாகவும் தமிழக அரசு வழங்கிய பதவி உயர்வுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை.
அவர்கள் மத்திய அரசைப் பொறுத்தவரை முன்பு இருந்த பதவிக்குறிய தகுதியோடு தான் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் பெரும் தொல்லையாய் விளங்கி வந்த வீரப்பனைக் கொன்ற அதிகாரிகளின் போற்றத்தக்கசாதனையை பாராட்டுவதை விட்டுவிட்டு விஜய்குமார், செந்தாமரைக் கண்ணன், சண்முகவேல் ஆகியோருக்கு தரப்பட்ட பதவிஉயர்வுகளை வாபஸ் பெறுமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த நாட்டின் ஒட்டுமொத்த போலீஸ் படையின் மன உறுதியைக் குலைக்கும் செயலாகும்.
இந்த மூவருக்கும் மாநில அரசால் தரப்பட்ட பதவி உயர்வுகளை மத்திய உள்துறைச் செயலாளர் நிராகரித்துவிட்டார். மேலும்அந்தப் பதவி உயர்வுகளை ரத்து செய்யுமாறு கடிதம் அனுப்பினார்.
இது குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அவரிடம் இருந்து பதிலே வரவில்லை(கவர்னர் மாற்றத்தின்போது பாட்டீலுடன் பேசியதை ஜெயலலிதா டேப் செய்ததாக புகார் எழுந்தது நினைவுகூறத்தக்கது).
அதே போல விஜய்குமாரின் பெயரை பத்மஸ்ரீ விருதுக்காக மாநில அரசு பரிந்துரைத்தது. செந்தாமரைக் கண்ணன், சண்முகவேலுஆகியோரது பெயரை அசோக் சக்ரா விருதுகளுக்காக பரிந்துரைத்தேன். மேலும் 3 அதிகாரிகளின் பெயர்கள் கீர்த்தி சக்ராவுக்காகபரிந்துரைக்கப்பட்டன.
இதையும் மத்திய அரசு ஏற்கவில்லை. எத்தனையோ பேருக்கு இந்த விருதுகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இவர்களுக்குஏன் தரவில்லை. அந்த விருதுகளைப் பெற இவர்களுக்கு தகுதி இல்லையா? என்று கேட்டார் ஜெயலலிதா.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications