நகைக் கடை கொள்ளையில் வேல்துரை!
சென்னை:
ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான வேல்துரைக்கு சென்னையில் நடந்த நகைக் கடைகொள்ளையில் முக்கியப் பங்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து வேல்துரையை சென்னைக்குக்கொண்டு வந்து விசாரணை நடத்தவுள்ளனர்.
பிரபல கல்வி நிறுவன அதிபர் எஸ்.ஏ.ராஜாவின் உத்தரவின் பேரில் வேல்துரை உள்ளிட்டவர்கள் ஆலடிஅருணாவைத் தீர்த்துக் கட்டியதாக போலீஸார் கூறுகிறார்கள். இந்த வழக்கில் எஸ்.ஏ.ராஜா, வேல்துரை ஆகியோர்கைது செய்யப்பட்டள்ளனர்.
இந் நிலையில் சென்னை ராயப்பேட்டை ஜேபி அவென்யூவில் உள்ள ஹரி மேன்சன் என்ற நகைக் கடையில் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் கொள்ளைச் சம்பவம் நடந்தது. கத்தி முனையில் ஒரு கும்பல் ஊழியர்களை மிரட்டி ரூ. 7லட்சம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
இக் கொள்ளை தொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த ராஜு என்கிற உருண்டை ராஜு பிடிபட்டுள்ளான். அவனிடம்நடத்திய விசாரணையின்போது வேல்துரை, ஆட்டோ பாஸ்கர், நாகர்கோவில் பென்னி ( அனைவரும் ஆலடிஅருணாவைக் கொன்ற கும்பலில் இருந்தவர்கள்) ஆகியோர் கொள்ளைக் கும்பலில் இருந்ததாகதெரிவித்துள்ளான்.
இதில் பென்னியும் ஆட்டோ பாஸ்கரும் போலீஸ் காவலில் மர்மமாய் இறந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிபட்ட உருண்டை ராஜுவிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது போலீஸ் வசம் சிக்கியுள்ள வேல்துரையிடம் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரிக்க சென்னைபோலீஸார் முடிவு செய்துள்ளனர். நாளை மறுநிாள் காவல் நீட்டிப்புக்காக வேல்துரை தென்காசி நீதிமன்றம்கொண்டு வரப்படவுள்ளான்.
அப்போது அவனை போலீஸ் காவலில் எடுக்க சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications