ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற அப்பு!
செங்கல்பட்டு:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை கூலிப் படைத் தலைவனான அப்பு வாபஸ் பெற்றுக்கொண்டார்.
சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராகசேர்க்கப்பட்டுள்ள அப்பு மீது சில நாட்களுக்கு முன்பு குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பு, சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அப்புவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜரத்தினம், மனுவை வாபஸ் பெறுவதாகஅறிவித்தார். இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.
இதில் ஜாமீன் கிடைத்தாலும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் இருந்து தான் ஆக வேண்டும் என்பதால் தனதுமனுவை அப்பு வாபஸ் பெற்றுவிட்டதாக அவரது தரப்பினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தில் பாண்டியன், சதீஷ், ஆறுமுகம் (3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்) ஆகியோர் தாக்கல்செய்துள்ள ஜாமீன் மனுக்கள், ஏற்கனவே தாக்கல் செய்துள்ள அருண், சில்வஸ்டர் ஸ்டாலின், தேவராஜ், சேகர் ஆகியோரது ஜாமீன்மனுக்களுடன் சேர்த்து செவ்வாய்க்கிழமை செங்கை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications