சங்கராச்சாரியார்களுக்கு நாளை குற்றப் பத்திரிக்கை: குண்டர் சட்டம் பாயுமா?
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேருக்கும் நாளை குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படவுள்ளது.
இதற்காக இவர்கள் அனைவரும் நாளை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி உத்தமராஜன் முன் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இதில் ஜெயேந்திரர் தவிர மற்ற அனைவரும் சிறைகளில் இருப்பதால் அவர்களை போலீசார் அழைத்து வரவுள்ளனர்.
ஜெயேந்திரர் தானாகவே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
விஜயேந்திரர் மீது குண்டர் சட்டமா?
இந்தக் கொலை வழக்கில் கைதான 25 பேரில், இதுவரை 16 பேர் ஒரு வருடத்துக்கு ஜாமீனில் கூட வெளியில் வர முடியாத அளவுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
மேலும் இருவர் ஜாமீனில் விடுதலையாகிவிட்டனர்.
அப்ரூவராக மாறிய ரவி சுப்பிரமணியம், ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் உள்பட மேலும் 7 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
இந் நிலையில் குற்றப் பத்திரிக்கை நகல் தரப்பட்ட கையோடு மிக விரைவில் விஜயேந்திரர் மீதும் விரைவில் குண்டர் சட்டம் பாயலாம் என்று கூறப்படுகிறது.
குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்ட பின் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தொடங்கிவிடும். காஞ்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.
விசாரணையை தினமும் நடத்தி மிக விரைவிலேயே தீர்ப்பைப் பெற போலீசார் மும்முரமாக உள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications