மக்களவை தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு: கமிஷனுக்கு அதிமுக கடிதம்
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து விசாரைண செய்து கேரள மாநிலத் தேர்தல் அதிகாரி தாமஸ் தாக்கல் செய்த அறிக்கையின் நகலைக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், அதனால் ஒட்டுமொத்த தேர்தலையும் ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கருத்து தெரிவிக்கையில், அரசியலில் சுனாமி ஏற்படுத்த ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்றார். இந் நிலையில் தாமஸ் அறிக்கையின் நகலைக் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு அதிமுகவின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே ஒரு தலைப்பட்சமான முடிவுகள் வெளிவந்தன. இந்த முறைகேடுகளுக்கு எதிராக, தேர்தல் நடந்த தினமான கடந்த வருடம் மே 10ம் தேதி முதல் அதிமுக போராடி வருகிறது.
அதிமுகவின் முயற்சி காரணமாகவே இது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது எங்கள் கட்சியின் நிலைப்பாடு சரி என்பதைக் காட்டுகிறது.
இத்தகைய முறைகேடுகள் காரணமாக, தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறோம். அதற்காக தாமஸ் அறிக்கையின் நகலைக் கேட்டு தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications