அதிமுக to
மதுரை:
கொலை வழக்கில் கைதாகியதால் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மதுரை துணை மேயர் மிசா பாண்டியன் அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் சேர முடிவு செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், தென் மாவட்ட திமுகவின் முக்கியப் புள்ளியாகவும் திகழ்ந்த மு.க.அழகியின் வலது கரமாக செயல்பட்டவர் மிசா பாண்டியன். அடிதடி பார்ட்டியான இவர் மீது பல வழக்குகள் உண்டு.
ஒரு கொலை வழக்கிலும் கைதானார். இதைத் தொடர்ந்து அவரை திமுக மேலிடம் இவரை கட்சியை விட்டு நீக்கியது. சிறிது காலத்திற்குப் பின்னர் அதிமுகவில் ஐக்கியமானார் மிசா பாண்டியன். அதிமுகவுக்கு சென்றால் புது வாழ்வு கிடைக்கும் என்று நம்பிய மிசாவுக்கு அங்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.
ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த மதுரை விஐபிக்களுக்குள் குடுமி பிடி சண்டை நடந்து வருவதால் மிசாவால் அக் கட்சியில் ஒன்றும் செய்ய முடியவில்லை.
தனது அரசியல் வாழ்வு அஸ்தானமானமாவதை உணர்ந்த மிசா மீண்டும் திமுகவுக்குத் தாவ திட்டமிட்டுள்ளார். ஜனவரி 30ம் தேதி அழகியின் பிறந்த நாள். இதையொட்டி அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி கலக்கியிருந்தனர் (சுவர்களை நாறடித்தனர்).
அதில் அதிகம் கவர்ந்தது மிசா பாண்டியன் பெயரால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள்தான்.
இதைத் தொடர்ந்து மிசா பாண்டியன் விரைவில் திமுகவில் சேருவார் என்று கூறப்படுகிறது. மிசா திமுகவுக்கு திரும்பி வருவதை அழகிரியும் ஆதரிக்கிறார். இருப்பினும் "மிசா"வை உள்ளே வர விடாமல் "பொடா" போடும் வேலைகளில் சில திமுக புள்ளிகள் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications