விஜயேந்திரர் விடுதலை; பாஜக பெரும் மகிழ்ச்சி
சென்னை:
விஜயேந்திரர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மாநில பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விஜயேந்திரர் விடுதலை மகிழ்ச்சி தருகிறது. ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரிதொடர்ந்து வலியுறுத்துவோம். இதுதொடர்பாக போராட்டங்களையும் நடத்துவோம்.
கோவாவில் நடந்துள்ளது ஜனநாயகப் படுகொலை. இதை ஜனாதிபதி அனுமதிக்கக் கூடாது. இப் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டுநியாயம் வழங்க வேண்டும்.
சுனாமியின் பெயரால் நிதி திரட்டப்பட்டு அதை தவறான வழியில் சிலர் பயன்படுத்துகிறார்கள். அந்த நன்கொடைகளை வைத்து சிலர்மதமாற்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். எனவே மீண்டும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசு அறிவித்த சுனாமி நிவாரண நிதியில் இதுவரை ரூ. 1,000 கோடி கூட கொடுக்கவில்லை. சென்னையில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், தமிழக அரசு கேட்டதை விட கூடுதலாக கொடுக்க மத்திய அரசிடம்முயற்சிப்போம், தமிழக அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் என்றார்.
ஆனால் அது நடக்கவில்லை என்றார் ராதாகிருஷ்ணன்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications