இன்று குற்றப் பத்திரிக்கை வழங்கப்படவில்லை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கையை பெறுவதற்காக ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேரும் இன்றுகாஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால், குற்றப் பத்திரிக்கை நகல்கள் முழுவதுமாகத் தயார் ஆகாததால்அவை இன்று வழங்கப்படவில்லை.
வரும் 24ம் தேதி குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜனவரி 21ம் தேதி காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. குற்றப் பத்திரிக்கை நகலை வாங்க ஜெயேந்திரர், விஜயேந்திரர், ஜாமீனில் வெளியில் இருக்கும் ஆறுமுகம், செந்தில்குமார், அப்பு, ரகு உள்ளிட்ட மற்ற 24 பேரும் இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
சென்னை சிறையிலிருந்து விஜயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்டோரும், கடலூர் சிறையிலிருந்து அப்புவும், நீதிமன்றத்திற்குஅழைத்து வரப்பட்டனர். அப்ரூவராக மாறிவிட்டதால் ரவி சுப்பிரமணியத்தின் பெயர் குற்றப் பத்திரிக்கையில் இல்லை. இதனால் அவர்நகலை வாங்க அழைத்து வரப்படவில்லை.
முன்னதாக கலவையில் இருந்து காலை 10.30 மணியளவில் ஜெயேந்திரர் காஞ்சிபுரம் புறப்பட்டார். அவரது மஞ்சள் வண்ண வேனுக்குமுன்பும் பின்னும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் அவரது பக்தர்களும் ஆதரவாளர்களும் உடன் வந்தனர். ஜாமீனில் வெளியில் வந்தபின் சுதந்திர மனிதராக ஜெயேந்திரர் காஞ்சிக்கு வந்தது இதுவே முதல் முறையாகும்.
ஜெயேந்திரர் 11.50 மணிக்கு கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார். பகல் 12.05 மணிக்கு நீதிபதி உத்தமராஜன் முன்பு 24 பேரும்ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் தியாகராஜன், குற்றப் பத்திரிக்கையை நகல் எடுக்கும் பணி இன்னும்முடியவில்லை. எனவே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.
இந் நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 21 பேரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அவர்களுக்கு வரும் 24ம்தேதி வரை நீதிபதி காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். (இதில் விஜயேந்திரருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது)
பின்னர் இந்த 21 பேரையும் ஜாமீனில் வெளியில் உள்ள ஜெயேந்திரர், ஆறுமுகம், செந்தில் குமார் ஆகியோரையும் வரும் 24ம் தேதிமீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
கூடுதல் அரசு வழக்கறிஞர் சம்பத் நிருபர்களிடம் பேசுகையில், சில நிர்வாக காரணங்களால் இன்று குற்றப் பத்திரிக்கை வழங்கப்படவில்லை.வரும் 24ம் தேதி குற்றப் பத்திரிக்கை வழங்கபடுமா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். குற்றம் சாட்டப்பட்ட 25 பேரில் ரவிசுப்பிரமணியம் அப்ரூவர் ஆகி விட்டதால், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அவரது பெயர் குற்றவாளிகள் பட்டியலிருந்து நீக்கப்பட்டு விட்டது. இதனால் மற்ற 24 பேர் மீது தான் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக இன்று ஒரே நாளில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானதால் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.
டி.எஸ்.பி ராஜரத்தினம் தலைமையில் போலீஸ் படை கோர்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications