கூட்டணிக்குள் ஈகோ யுத்தம்: சோனியா-வாசன் ஆலோசனை
டெல்லி:
தமிழக காங்கிரசுக்கு உட்கட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக சோனியா காந்தியுடன் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனைநடத்தினார்.
அப்போது கோஷ்டிப் பூசல்கள் குறித்தும், கூட்டணிக்குள் நிலவும் ஈகோ யுத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் கோஷ்டிப் பூசல் வழக்கம் போல் தீவிரமாக இருப்பதால்தேர்தலை மிக அமைதியாக நடத்தும் வகையில் ஒவ்வொரு கோஷ்டியின் தலைவருடனும் கட்சி மேலிடம் பேசவுள்ளது.
அந்த வகையில் முதலில் மாநிலத் தலைவரும் கட்சியில் உள்ள பெரிய கோஷ்டியின் தலைவருமான ஜி.கே.வாசனை டெல்லிக்கு அழைத்தகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவருடன் தேர்தல் குறித்து விவாதித்தார்.
அப்போது, பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, பிரபு ஆகியோர் தனியாக உறுப்பினர் சேர்க்கையை நடத்தியுள்ளதாகவும்,மேலும் பல தலைவர்கள் போலி உறுப்பினர்களை சேர்த்து வருவதாகவும் வாசன் புகார் கூறினார்.
இதுநாள் வரை பரம விரோதிகளாக இருந்து வந்த ஜி.கே.வாசனும், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் திடீரென கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு வருவதால் மற்ற கோஷ்டிகள் தடுமாற்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இருவரும் சேர்ந்து கொண்ட நிலையில், தேர்தல் நடத்தினால் முக்கிய பதவிகளையும் பெரும்பாலான பதவிகளையும் இந்த இருகோஷ்டிகளைச் சேர்ந்தவர்களே பிடித்து விடும் நிலை உள்ளது.
இதனால் தங்களது ஆதரவாளர்கள் என்ற வகையில் ஏராளமான போலி உறுப்பினர்களை மற்ற கோஷ்டித் தலைவர்கள் கட்சியில் சேர்த்துவருகின்றனர். இவர்களின் ஓட்டுக்களை வைத்து முக்கியப் பதவிகளைக் கைப்பற்றுவது இந்த கோஷ்டித் தலைவர்களின் திட்டம்.
வாசன்-இளங்கோவன் கூட்டணி முறியடிப்பதற்காகவே, சிறிய கோஷ்டிகளின் தலைவர்களான அன்பரசு, தங்கபாலு, திண்டிவனம்ராமமூர்த்தி உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து செயல்படவும் முடிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தவிர தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் நிலவும் விவகாரங்கள் குறித்தும் வாசன்-சோனியா விவாதித்தனர்.
திமுக தங்களை மதிப்பதில்லை என மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும் புகாரை சோனியாவின் கவனத்துக்கு வாசன் கொண்டு சென்றதாகத்தெரிகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications