விஜயக்குமார்: நாடாளுமன்றத்தில் பிரச்சனை கிளப்ப அதிமுக முடிவு
டெல்லி:
தமிழக சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமாருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை மத்திய அரசு நிராகத்த விவகாரத்தைநாடாளுமன்றத்தில் பிரச்சனையாக்க அதிமுக தீர்மானித்துள்ளது.
லோக்சபாவில் அதிமுகவுக்கு ஒரு எம்பி கூட இல்லாததால் இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் அந்தக் கட்சி கிளப்பவுள்ளது.
வீரப்பனை சுட்டுக் கொன்றதற்காக அதிரடிப்படையினர் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா, ஒரு படி பதவி உயர்வு, ரொக்கப் பரிசு,வீட்டு மனை ஆகியவற்றை அறிவித்தார்.
ஆனால் ஐபிஎஸ் அதிகாரிகளான கூடுதல் டிஜிபி விஜயக்குமார், செந்தாமரைக் கண்ணன் மற்றும் சண்முகவேல் ஆகியோருக்குவழங்கப்பட்ட பதவி உயர்வை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகத்து விட்டது.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இப்படி நினைைத்தபோதெல்லாம் பதவி உயர்வு தர முடியாது, பணி மூப்பின் அடிப்படையில் தான் பதவி உயர்வுதரலாம் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்ததோடு, கொடுத்த பதவி உயர்வையும் திரும்பப் பெறுமாறு தமிழக அரசுக்குஉத்தரவிட்டது.
மேலும் இந்தப் பதவி உயர்வுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்பதையும் தெளிவாக்கியது.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் ஆவேசமாக பேசினார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையைகிளப்பவும் அதிமுக முடிவு செய்துள்ளது.
இதற்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்கியதற்காக பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இதுபோன்ற பதவி உயர்வுவழங்கப்பட்ட முன்னுதாரணங்களை அதிமுக எம்.பிக்கள் திரட்டியுள்ளனர்.
பட்ஜெட் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்றம் கூடும்போது பெரும் பிரச்சினையை கிளப்ப அதிமுக தீர்மானித்துள்ளது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் அல்லாத பிற கட்சிகளின் ஆதரவைப் பெறவும் அதிமுக முயன்று வருகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications