சட்டசபைத் தேர்தலை நடத்த தயாரா? ஜெ.வுக்கு கருணாநிதி கேள்வி
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலை திரும்ப நடத்தக் கோரும் முதல்வர் ஜெயலலிதா, சட்டசபைக்கு உடனடியாக தேர்தல் நடத்தத் தயாராஎன்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
மேலும் தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லும் ஜெயலலிதா முதலில் 2001ல்நடந்த சட்டமன்றத் தேர்தலையும் ரத்து செய்யுமாறு கோர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சாதிரீதியில் தனக்கு சாதகமில்லாத தொகுதிகளை எதிர்க் கட்சியினருக்கு பாதகமாக அமையும் வகையில் அதிமுக அரசு மாற்றிஅமைத்து வருகிறது. இதற்காக, எதிர்க் கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் தொகுதிகளைப் பிரித்து, மாற்றி அமைத்துவருகிறது.
எதிர்க் கட்சிகள் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு வெல்லும் தொகுதிகளை ரிசர்வ் தொகுதிளாக்கும் வேலைகளும் நடந்துவருகின்றன.
இந் நிலையில் இந்த தொகுதி மறு வரையறை தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,
தொகுதி மறு வரையறை தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி தமிழக அரசு நடந்து வருகிறது.
மறு வரையறை விதிப்படி, பஞ்சாயத்துக்கள், பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்ட பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றைஅடிப்படையாகக் கொண்டுதான் தொகுதிகளின் எல்லைகள் மாற்றப்பட வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகதாலுகாக்களை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை மாற்றி வருகிறது.
அதேபோல, தங்களுக்கு ஆதாயம் வரும் வகையில் தொகுதிகளை மாற்றி வருகிறது அதிமுக அரசு.
பிப்ரவரி 17ம் தேதிக்குள், தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளின் முழு வரைபடத்தையும் தயாரிக்குமாறு திமுகமாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தேர்தல் ஆணைய தொகுதி மறு வரையறைகமிட்டியிடம் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்படும்.
இந்த விவகாரத்தை நிர்வாகரீதியாகவும் சட்டரீதியாகவும் திமுக எதிர்கொள்ளும்.
நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்து விட்டதால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுகிறார் ஜெயலலிதா. இதற்காகஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப் போகிறாராம். அதற்கு முன் 2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலையும் ரத்து செய்துவிட்டுமீண்டும் சட்டசபைத் தேர்தலை நடத்த ஜெயலலிதா தயாரா?.
தேர்தல் விதிகள் மிகத் தெளிவாக இருக்கின்றன. நினைத்தபோதெல்லாம் தேர்தலை ரத்து செய்யச் சொல்ல முடியாது. அதிமுகவிடம்திறமையான வழக்கறிஞர்கள் இருந்தால் வழக்குப் போட்டுப் பார்க்கட்டும் என்றார் கருணாநிதி.
பேட்டியின்போது உடனிருந்த முன்னாள் அமைச்சர் பொன்டி கூறுகையில், தியாகதுர்கம் பஞ்சாயத்து யூனியனை மூன்றாகபிரித்துள்ளார்கள். அதை சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்ப்பேட்டை சட்டசபைத் தொகுதிகளுடன் பிரித்துஇணைத்துள்ளார்கள். இதேபோல தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் நடந்துள்ளது என்றார்.
தமிழகம் முழுவதும் சாதிரீதியில் தனக்கு சாதகமில்லாத தொகுதிகளை எதிர்க் கட்சியினருக்கு பாதகமாக அமையும் வகையில்அதிமுக அரசு மாற்றி அமைத்து வருகிறது. இதற்காக, எதிர்க் கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் தொகுதிகளைப் பிரித்து,மாற்றி அமைத்து வருகிறது.
எதிர்க் கட்சிகள் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு வெல்லும் தொகுதிகளை ரிசர்வ் தொகுதிகளாக்கும் வேலைகளும் நடந்துவருகின்றன.
இந் நிலையில் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் நடக்கிறது.சட்டமன்றத் தேர்தலை முன் கூட்டியே நடத்துவார் என திமுக கருதுகிறது. இது குறித்தே இக் கூட்டத்தில் விரிவாகவிவாதிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications