வாக்காளர் பட்டியலிலும் புகைப்படம்
சென்னை:
வாக்காளர் அடையாள அட்டையைப் போலவே, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தமிழகத்தில்அறிமுகப்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாதெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நரேஷ்குப்தா நடத்தினார். இதில்,அதிமுக சார்பில் சட்ட அமைச்சர் ஜெயக்குமார், ஜோதி எம்.பி, திமுக சார்பில் பொன்முடி, கிருஷ்ணசாமி எம்.பி., பாமக சார்பில்பாஸ்கரன், ஜெயராமன், மதிமுக சார்பில் தேவதாஸ், நன்மாறன், பாஜக சார்பில் குமாரவேலு, வைத்தியலிங்கம், காங்கிரஸ் சார்பில்சக்திவடிவேல், நாராயணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சம்பத், ஏழுமலை, சிபிஎம் சார்பில் நாயனார், ரமணி, தேசியவாதகாங்கிரஸ் சார்பில் சாரதி, முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நரேஷ்குப்தா கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்தோம்.
வாக்காளர் பட்டியல்களில் வாக்காளர்களின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும், அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்பட்டியல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பணி வெளிப்படையாக நடைபெற வேண்டும். போதிய விளம்பரம் செய்யப்பட வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சி.டி. விலையை குறைக்க வேண்டும்; ரேஷன் கடைகளிலும் பட்டியல்களை மக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் சி.டி. தற்போது ரூ 500 ஆக உள்ளது. இதை ரூ. 100 ஆகக் குறைப்பது குறித்துபரிசீலிக்கப்படும். அதேபோல் மக்களவைத் தொகுதி சி.டியின் விலை ரூ. 3,000ல் இருந்து மேலும் குறைக்கப்படும்.
கேரளாவில் இருப்பதுபோல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தமிழகத்திலும் தயாரித்து வெளியிடுவது குறித்துபரிசீலித்து வருகிறோம். தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று, வரும் ஆகஸ்டு மாதத்திற்குப் பின் முன்னோடித் திட்டமாக ஒருமாநகராட்சிப் பகுதியில் இது செயல்படுத்தப்படும்.
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு தொண்டு நிறுவனங்கள், மாணவர்களை பயன்படுத்தினால், தவறுகளுக்கு அவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க இயலாது. எனவே வழக்கம்போல் அரசு ஊழியர்கள் தான் பயன்படுத்தப்படுவர்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது நடைபெற்ற வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக தேர்தல் ஆணையம்அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கங்கள் கேட்டுள்ளது. ஊழியர்கள் தங்களது விளக்கங்களை அனுப்பி வருகின்றனர்.அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications