ஹெராயின்: இலங்கை நாட்டவருக்கு சிறை
சென்னை:
போதை மருந்து கடத்திய வழக்கில் 3 வெளி நாட்டினருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை முதன்மை சிறப்புநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி சூட்கேசின் அடியில் 3 கிலோ ஹெராயினை வைத்துக் கடத்த முயன்ற, இலங்கைத்தமிழர்கள் செல்லத்துரை சண்முகம் (கனடா குடியுரிமை பெற்றவர்), மதுரநாயகம் மற்றும் மலேசிய நாட்டுப் பெண் நடாஷா பிந்திஸகாரிஸ் ஆகிய மூவரையும் போதைப் பொருள் தடுப்பு போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை போதைப் பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதன்மை சிறப்புநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி நஸீர் முகம்மது,3 பேருக்கும் பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.
அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
போதை மருந்து தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications