தப்பியது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்!
ஹைதராபாத்:
தண்டவாளத்தில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், கெளதமி எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மிகப்பெரும் விபத்துகளில் இருந்து தப்பின.
ஆந்திர மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் கேசமுத்திரம் ரயில்வே நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் தண்டவாளத்தில்விரிசல் இருந்தது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் இதைக் கண்டுபிடித்து, உடனடியாக கேசமுத்திரம்ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
ரயில்வே அதிகாரிகள் அந்த வழியாக வந்து கொண்டிருந்த கெளதமி எக்ஸ்பிரஸ் ஓட்டுநரை வாக்கி டாக்கி மூலம் தொடர்புகொண்டு, தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயில் உடனே நிறுத்தப்பட்டது. இந்த வழியாகத் தான் சென்னை-டெல்லிதமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலும் செல்ல இருந்தது.
தகவல் அறிந்து உயர் அதிகாரிகள் விரைந்து வந்து தண்டவாள விரிசலை சரி செய்தனர். இதனால் சார்மினார் எக்ஸ்பிரஸ்,ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் 3 மணி நேர தாமதத்திற்குள்ளாயின.
இது நக்ஸலைட்களின் வேலையல்ல என்றும், அதிருப்தியிலிருக்கும் ரயில்வே ஊழியர்கள் யாராவது இதை செய்திருக்கலாம்என்றும் போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications