உளவாளி கொலை வழக்கு: விடுவிக்க நக்கீரன் கோபால் கோரிக்கை
கோவை:
போலீஸ் உளவாளி கொலை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரி கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நக்கீரன்ஆசிரியர் கோபால் உள்ளிட்ட 4 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
போலீஸாருக்கு தங்களைப் பற்றிய தகவல்களை போலீஸ் உளவாளி பக்தவச்சலம் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த வீரப்பன் கும்பல்அவரை கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி கொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் வீரப்பன் கும்பலுக்கு உதவியாக இருந்ததாகக் கூறி நக்கீரன் ஆசிரியர் கோபால், நிருபர் சிவசுப்ரமணியன், தமிழ்த்தீவிரவாதிகள் பாஷா மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி நான்கு பேரும் கோவை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில்,1998ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பக்தவச்சலம் காணாமல் போனதாக அவரது தந்தை போலீஸில் புகார் செய்ததாக போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
ஆனால் குற்றப்பத்திரிக்கையில், 1998ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதியே வீரப்பன் கும்பல் பக்தவச்சலத்தைக் கொலை செய்து விட்டதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.
முரண்பாடான தகவல்களைக் கொண்டு இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. பழி வாங்கும் நோக்கில் ஜோடிக்ப்பட்ட வழக்கு இது. சம்பவம்நடந்து 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கு தொடரப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்று கோபாலின் வழக்கறிஞர் மோகன் மனுவில்தெரிவித்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ரத்னவேல் திங்கள்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தார். மனு தாக்கலையொட்டி கோபால் உள்ளிட்டோர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். சிறைக் காவலில் உள்ள பாஷாவும், சத்தியமூர்த்தியும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications