நாகை: சோகம் போனது; இப்போது திருமண சீசன்
நாகப்பட்டனம்:
சுனாமியால் ஏற்பட்ட சோகம் மறைந்து இப்போது நாகை மாவட்டத்தில் சந்தோஷம் திரும்பத் தொடங்கியுள்ளது.
டிசம்பர் 26ம் தேதி வீசிய சுனாமி அலைகளில் சிக்கி நாகை மாவட்டம் சின்னாபின்னமானது. திரும்பிய பக்கமெல்லாம் பிணங்களாகக்காணப்பட்டன. வீடுகளை, உறவுகளை இழந்து மக்கள் பரிதவித்தனர்.
இந்த சோகம் இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குக் திரும்பி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் பலதிருமணங்கள் நாகையில் நடப்பதாக இருந்தன. ஆனால் சுனாமி சோகத்திலிருந்து இன்னும் விடுபடாததால், திருமணங்களைத் தள்ளிவைத்தனர்.
தள்ளி வைக்கப்பட்ட திருமணங்கள் தற்போது நடந்தேற ஆரம்பித்துள்ளன. நேற்று மட்டும் மொத்தம் 16 திருமணங்கள் சுனாமிபாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்தன. நாகப்பட்டனத்தில் 8 கல்யாணங்களும், தரங்கம்பாடி அருகே ஒழுகைமங்கலம் பகுதியில் 8கல்யாணங்களும் நடந்தன.
நாகை நீலதாயாட்சி அம்மன் கோயிலில் 8 கல்யாணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சித் தலைவர்ஜே.ராதாகிருஷ்ணன், தனது மனைவியுடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார். மாப்பிள்ளைகள் 8 பேரிடமும் அவர் தாலி எடுத்துக்கொடுக்க திருமணம் நடந்தேறியது.
கல்யாணம் நடந்த வீடுகளைச் சேர்ந்த பலரும் சுனாமிக்குப் பலியாகி விட்டனர். அந்த சோகத்திலிருந்து அவர்கள் விடுபட இந்தகல்யாணங்கள் கொஞ்சம் உதவின என்றால் மிகையாகாது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications