ரூ. 100 கோடி மான நஷ்ட வழக்கு: சுவாமி மிரட்டல்
மதுரை:
ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான வழக்குகளை தமிழக அரசு கைவிடாவிட்டால் ரூ. 100 கோடி கோரி மான நஷ்ட வழக்குப்போடுவேன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மிரட்டியுள்ளார்.
மிரட்டல் அறிக்கைகள், தடாலடி பேட்டிகள் கொடுப்பதில் வல்லவரான சுப்பிரமணியம் சுவாமி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதிலிருந்துதமிழக அரசு மீது சரமாரியாக கண்டனக் கணைகளை வீசி வருகிறார்.
இந் நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொடுத்த நிர்பந்தம்காரணமாகத்தான் ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்குபோட்டுள்ளார். இந்த வழக்குக்கு அடிப்படை ஆதாரமே இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி விட்டது.
உச்ச நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியுள்ளன. எனவே இதை அடிப்படையாக வைத்து சங்கராச்சாரியார்கள்மீதான வழக்குகளை தமிழக அரசு உடனடிாயக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். ஆகியஅமைப்புகளுடன் சேர்ந்து ஜனதாக் கட்சி பெரும் போராட்டத்தில் ஈடுபடும்.
வழக்குகளை அரசு வாபஸ் பெறாவிட்டால் தமிழக அரசு மீது ரூ.100 கேட்டு மான நஷ்ட வழக்கும் போடுவேன்.
எஸ்.பி. பிரேம்குமாரை உடனடியாக மாற்ற வேண்டும். அவர் மீதே பல வழக்குகள் உள்ளன. நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்பிரேம்குமார் என்றார் சுவாமி.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications