சட்டமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார்: வாசன்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை:

மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசன்மறுத்துவிட்டார்.

திருவண்ணாமலையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நான் மத்திய அமைச்சராகப் போவதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. நான் இதுவரை காங்கிரஸ் மாநிலத் தலைவராகவேஉள்ளேன். அன்னை சோனியா தந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மந்திரி பதவி தரப்பட்டால் ஏற்பேனா இல்லையா என்பது குறித்து நான் சொல்வதற்கு ஏதுமில்லை.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. காங்கிரஸ் மட்டுமல்ல எங்கள்கூட்டணிக் கட்சிகளும் மிகத் தயாராகவே உள்ளன என்றார் வாசன்.

இளங்கோவன்:

இதற்கிடையே சென்னையில் காங்கிரஸ் தொண்டரின் இல்லத் திருமண விழாவில் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசுகையில்,

இப்போது பெண்கள் ஆண்களுக்கு சமமாக சாதனைகள் படைத்து வருகிறார்கள். பெண்களுக்கு எடுத்துக் காட்டாக இந்திரா காந்திவிளங்கினார், இப்போது சோனியா காந்தி விளங்குகிறார்.

ஆனால், இன்று ஒரு சிலர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள், செய்கிறார்கள்.அது நல்லதல்ல என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+