ஜெயலலிதா கஷ்டப்படுவார்: எச்.ராஜா சாபம்!
காரைக்குடி:
சங்கர மடத்திற்கு களங்கம் ஏற்படுத்திய முதல்வர் ஜெயலலிதா பல கஷ்டங்களை அனுபவிப்பார் என்று தமிழகபாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா சாபமிட்டார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சங்கரராமன் கொலை வழக்கு பிசுபிசுக்க ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு தீர்ப்பாக வர ஆரம்பித்து விட்டது. இதனால் தமிழக அரசுக்கு பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டது.
ஜெயேந்திரரை இந்த வழக்கில் தொடர்புப்படுத்த தமிழக அரசிடம் போதிய ஆதாரம் இல்லை. இதன்காரணமாகத்தான் ஜெயேந்திரரை உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. அதை அரசால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
இந்த எரிச்சலை விஜயேந்திரரைக் கைது செய்து காட்டியுள்ளது அரசு. அவரையும் இந்த வழக்கில் தொடர்புப்படுத்தபோதிய ஆதாரம் இல்லாததால் உயர் நீதிமன்றம் விஜயேந்திரரையும் ஜாமீனில் விடுவித்து விட்டது.
இதைப் பொறுத்தக் கொள்ள முடியாத அரசு இப்போது குருமூர்த்தியைப் பிடிக்க வழக்குப் போட்டுள்ளது.இதெல்லாவற்றையும் பார்க்கும்போது சங்கர மடத்துக்கு எதிராக தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுவதாகவேதோன்றுகிறது.
கொஞ்சமாவது நாகரீகம் இருக்குமானால் ஜெயலிலதா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மடத்திற்குஎதிரான வழக்குகளை வாபஸ் பெறுவதுதான் அவருக்கு மரியாதை.
ஜெயலலிதாவின் இந்து விரோத போக்குக்கு சட்டசபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
சங்கரராமன் வழக்கில் முழு தீர்ப்பு வந்தவுடன், தமிழக அரசு பல சிக்கல்களை சந்திக்கும், சங்கர மடத்திற்குகளங்கத்தை ஏற்படுத்திய ஜெயலலிதா பின்னால் அதற்காக ரொம்பவே கஷ்டப்படுவார் என்று சாபமழைபொழிந்தார் ராஜா.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி












Click it and Unblock the Notifications