ரவி புகார் எதிரொலி: நசீமா நாளை வரை கைதில்லை
காஞ்சிபுரம்:
ரவிசுப்ரமணியத்தை மிரட்டிய விவகாரத்தில் சங்கர மடத்தின் பெண் வழக்கறிஞர் நசீமாா பானுவை நாளை வரைகைது செய்யக் கூடாது என செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சங்கர மட வழக்கறிஞர்கள் தன்னை சிறையில் சந்தித்து கொலை மிரட்டல் விடுத்ததாக ரவி சுப்பிரமணியம்காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜனிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின்பேரில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் சங்கர மடத்தின்வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம், ரேவதி, நசீமா பானு ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டள்ளது.
இதைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் 3 நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில்குதித்துள்ளனர். இன்று 3 வது நாளாக வழக்கறிஞர்கள் பணிக்குச் செல்லவில்லை.
இந் நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்பதால், நசீரா பானு செங்கல்பட்டு செஷன்ஸ்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீது இன்று பிற்பகலில் விசாரணை நடக்கவுள்ளது.
இதற்கிடையே, போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூவிடம் புகார் அளிக்க காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications