ரன்வேயில் டயர் துண்டுகளால் ஏற்பட்ட பதற்றம்
மும்பை:
பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் டயர்கள் சேதமடைந்ததாக தவறான தகவல் தரப்பட்டதால் பதற்றம் நிலவியது.
அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் கிளம்பிச் சென்றது. இதையடுத்து ரன்வேயின் வழக்கமான சோதனையில்ஊழியர்கள் ஈடுபட்டபோது டயர் துண்டுகள் சிதறிக் கிடந்தன.
அவை ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானத்தின் டயர் துண்டுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனால் சேதமடைந்த டயருடன்அந்த விமானம் பறந்து கொண்டிருப்பதாக மும்பை சத்ரபதி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அகமதாபாத் விமான நிலையஅதிகாரிகள் தகவல் தந்தனர்.
பைலட்டுக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் தரையிறங்கும்போது பிரச்சனை நேரலாம் என்ற பதற்றம் ஏற்பட்டது.இதனால் விமான நிலையம் எமர்ஜென்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால், 133 பயணிகளுடன் அந்த விமானம் பகல் 2.15 மணியளவில் பத்திரமாகவே தரையிறங்கியது. பின்னர் விமானத்தின் டயர்களைசோதித்தபோது அதில் சேதம் ஏதும் காணப்படவில்லை.
இதனால் அகமதாபாத்தில் முன்பு சென்ற ஏதோ விமானத்தின் டயர் தான் சேதமடைந்து சிதறியிருக்க வேண்டும் என்று தெரியவந்தது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications