அதிமுக எம்எல்ஏ கொலையில் வட இந்திய கொள்ளையன் பிடிபட்டான்
சென்னை:
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை தமிழகபோலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 9ம் தேதி வீட்டில் வைத்து கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் சுதர்சனம். அவரது வீட்டிலிருந்த பணம்,நகை ஆகியவற்றை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர். அவரது மகன், மருமகளும் தாக்கப்பட்டனர்.
இந்தக் கொலை தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது. விசாரணையில் இந்தக்கொலை-கொள்ளையை நடத்தியது வட இந்தியக் கொள்ளைக் கும்பல் தான் என்று தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் தலைமையிலான தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிர தேடுதல்வேட்டை நடத்தினர். இதில் அமர்சிங் என்பவன் பிடிபட்டான்.
52 வயதாகும் அமர்சிங் கடந்த 12ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளான். பின்னர் அங்குள்ள பரத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திய தமிழக போலீஸார் அவனை தங்களது கஸ்டடியில் எடுத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அவன் திருவள்ளூர் கொண்டு வரப்பட்டு பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.இன்று அவரை போலீஸ் காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
-
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications