திருக்குறுங்குடி கோவில் கணக்காளர் கொலை: 6 பேருக்கு முன் ஜாமீன்
மதுரை:
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கோவில் கணக்காளர் முருகேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் 6 பேருக்குமதுரை உயர்நீதிமன்ற கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
திருக்குறுங்குடி மடம் மற்றும் கோவில் கணக்காளராக இருந்த முருகேசன் கடந்த ஜனவரி 20ம் தேதி காவல்கிணறு அருகேரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். முதலில் விபத்தாக இதைப் பதிவு செய்த போலீஸார் பின்னர்சந்தேகமடைந்து கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர்.
(இந்தக் கோவிலின் சிவன் சன்னதியை அகற்ற உத்தரவிட்ட ஜெயேந்திரரை எதிர்த்துக் குரல் தந்த அர்ச்சகர் மாதவன்தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாதவன் தாக்கப்பட்ட விஷயத்தில் போலீசாருக்கு பல தகவல்களைத் தந்து வந்தார் முருகேசன்.இந் நிலையில் தான் மர்மமாக இறந்து கிடந்தார்)
தண்டவாளத்தில் கிடந்த முருகேசனின் உடலுக்கு அருகே கிடந்த ஒரு காகிதத்தில், மடக் கணக்குகளை திருத்த வேண்டும்.இல்லாவிட்டால் சங்கரராமனுக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து சிலருடைய மிரட்டல் காரணமாகவே முருகேசன் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என்று போலீஸார்முடிவுக்கு வந்தனர்.
இதையடுத்து திருக்குறுங்குடி மட மேலாளர் திருநாராயணன், நம்பிப் பாண்டியன், திருநாமம் என்ற ராதா, நம்பித் தலைவன் என்றசிம்சன் பாண்டியன், ஆர்.சேஷாத்ரி, செல்வம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
தாங்கள் கைதாகக் கூடும் என்பதால் முன் ஜாமீன் கோரி இந்த 6 பேரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல்செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கண்ணதாசன், 6 பேருக்கும் முன் ஜாமீன் வழங்கினார். மேலும், காஞ்சிபுரம் தனிப்படைபோலீஸார் முன்பு, அவர்களாகவே விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
6 பேரில் நான்கு பேரை விசாரணைக்கு வருமாறு தனிப்படை போலீஸார் ஏற்கனவே அழைத்திருந்தும் அவர்கள் வராமல் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications