மேலவளவு கொலை வழக்கு: 17 பேர் சரண்
மதுரை:
மதுரை மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால்ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 17 பேரும் மேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கடந்த 1996ம் ஆண்டு மேலூர் அருகே உள்ள மேலவளவு பஞ்சாயத்துக்கு நடந்த தேர்தலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முருகேசன்தலைவராக வெற்றி பெற்றார். இதைப் பொறுக்க முடியாத இன்னொரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் முருகேசனை தீர்த்துக் கட்ட முடிவுசெய்தனர்.
1997ம் ஆண்டு முருகேசனும் அவரது நண்பர்கள் 5 பேரும் பஸ்சில் வந்து கொண்டிருந்தபோது பஸ்ஸை வழி மறித்து ஒரு கும்பல்சரமாரியாக அரிவாள்களால் தாக்குதல் நடத்தியது. இதில் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் நடுரோட்டில் பட்டப் பகலில் பஸ்சில் வைத்துகொல்லப்பட்டனர்.
இந்தப் பயங்கர படுகொலை தொடர்பாக 17 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிரிகள் மேல் முறையீடு செய்தனர்.
மேலும் தங்களை ஜாமீனில் விடுவிக்குமாறும் கோரினர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
17 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இவர்களுக்கு உயர் நீதிமன்றம் தந்த ஜாமீனை ரத்து செய்தது.
மேலும் இந்த 17 கொலையாளிகளையும் மீண்டும் கைது செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த 17 பேர் கொலைக் கும்பல் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.
இந்தக் கொலை காரணமாக மதுரை அருகே 3 தலித் பஞ்சாயத்துகளில் யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதே இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. போட்டியிட்டு வென்றால் முருகேசனுக்கு ஏற்பட்ட கதி தான் தங்களுக்கும் ஏற்படும் என்பதால் தலித்கள்போட்டியிடுவதை தவிர்த்து வருகின்றனர்.
ஜாதிரீதியிலான ஆதிக்கத்தை முறியடித்து இந்த பஞ்சாயத்துகளில் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசும் அமைதியாகவே இருந்து வருகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications