போலி ஓட்டுனர் லைசென்ஸ்கள்: சென்னையில் வாகன சோதனை தீவிரம்
சென்னை:
சென்னையில் போலி ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை தயாரித்து, விற்பனை செய்து வந்த 6 பேர் கொண்ட கும்பலைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கும்பல் இதுவரை 40,000 போலி லைசென்சுகளை வினியோகித்துள்ளதால், சென்னை நகரில் அனைத்து இரண்டு சக்கரவாகன ஓட்டிகளின் லைசென்சுகளையும் சரிபார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் போலி ஓட்டுனர் லைசென்சுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இதைத்தயாரித்து விற்கும் கும்பலைப் பிடிக்க ரகசிய விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில் சைதை சேகர் என்பவர் போலீஸாரிடம் சிக்கினார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி ஆர்.டி.ஓ.அலுவலகத்தையே இவர் நடத்தி வந்தது தெரியவந்தது.
சேகர் தவிர தாந்தோணி, சேதுராமன், சங்கர், நீலமேகம் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து போலி ஓட்டுநர் உரிமங்களைத் தயாத்துவிற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், ஓட்டுனர் உரிமத்தில் உள்ள ஹாலோகிராம் முத்திரையை போலியாக தயாரிக்க உதவும்எந்திரத்தை டெல்லியில் ரூ. 1 லட்சம் செலவிட்டு வாங்கி வந்துள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி இதுவரை 40,000 போலி ஒட்டுனர் உரிமங்களை இந்தக் கும்பல் தயாரித்து, ஒரு உரிமம் ரூ. 800 என்றவிலைக்கு விற்றுள்ளது.
இக் கும்பலிடமிருந்து ரூ. 8.5 கோடி மதிப்புள்ள 60,000 ஹாலோகிராம் முத்திரைகள், போலி அரசு சீல்கள், கம்ப்யூட்டர்கள்,கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பல் இதுவரை ரூ. 1.5 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது.
இவர்கள் மூலம் வினியோகிக்கப்பட்டுள்ள போலி ஓட்டுனர் உரிமங்களைப் பறிமுதல் செய்வதற்காக நகர் முழுவதும் இரு சக்கரவாகனங்களின் ஓட்டுனர் உரிமங்களை சோதனையிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் நடராஜ்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications