பெங்களூர்: ஜெ. வழக்கை விசாரிக்கவுள்ள நீதிமன்றத்தில் வெடிகுண்டு புரளி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றம் அமைந்துள்ள பெங்களூர் சிட்டிசிவில் கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டல் தொலைபேசித் தகவலையடுத்து பெரும் பரபரப்புஏற்பட்டது.

வருமானத்தை மீறி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்து குவித்தது தொடர்பான வழக்கு பெங்களூர் மாநகராட்சிஅலுவலகத்துக்கு அருகே உள்ள சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் விசாரிக்கப்படவுள்ளது.

இதற்காக இங்கு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற வளாகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு புரளி வந்தது. நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவந்த தகவலையடுத்து நீதிபதிகள், ஊழியர்கள், விசாரணைக்காக வந்தவர்கள் என அனைவரும் அவசர அவசரமாகவெளியேற்றப்பட்டனர்.

போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய்களுடன் வந்து சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர தீவிர சோதனையில்வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றப் பணிகள் தொடங்கின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+