மும்தாஜை விசாரிக்க மும்பை போலீஸ் வருகை?
சென்னை:
நக்மா பெயர் குழப்ப விவகாரம் தொடர்பாக நடிகை மும்தாஜிடம் விசாரணை நடத்த மும்பை போலீஸார் சென்னை வரவுள்ளதாகத்தெரிகிறது.
மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமுக்கும், நடிகை நக்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இப்ராகிமின்கூட்டாளியாக இருந்த ராஜேஷ் ஜம்போ என்பவன் மும்பை போலீஸில் வாக்குமூலம் கொடுத்தான்.
இதைத் தொடர்ந்து ராஜேஷ் குறிப்பிடும் நக்மா நான் அல்ல, அது தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ். மும்தாஜின்இயற்பெயர் நக்மா கான். அவரது தாயார் தபசும்கான் கடந்த 2000மாவது ஆண்டில் மும்பை தாதாக்களுடன் இருந்த தொடர்பு காரணமாககைது செய்யப்பட்டவர். இப்போது லண்டனில் வசித்து வருகிறார் என்று நடிகை நக்மா விளக்கம் அளித்தார்.
நக்மாவின் மறுப்பு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நக்மாவின் புகார்களை மும்தாஜ் மறுத்துள்ளார். எனது பெயர் நக்மா என்பதுஉண்மைதான். ஆனால் ராஜேஷ் கூறியுள்ள காலகட்டத்தைப் பார்த்தால் அப்போது நான் பள்ளியில் படித்து வந்தேன்.
எனது தாயாரின் பெயர் தபசும்கான் என்று கூறியுள்ளார் நக்மா. ஆனால் அது உண்மையல்ல. அவரது உண்மையான பெயர் ரூபைனா கான்.அவர் இப்போது லண்டனில்தான் வசித்து வருகிறார். அவரை போலீஸார் கைது செய்யவில்லை என்று மும்தாஜ் கூறியுள்ளார்.
நக்மாவும், மும்தாஜும் மாறி மாறி மறுத்து வருவதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அனீஸுடன் தொடர்பு வைத்திருந்த நக்மா யார் என்பதை அறிய மும்பை போலீஸார் சென்னைக்கு வந்து மும்தாஜை விசாரிக்க முடிவுசெய்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications