சிக்கியது ஜெவின் கார்: வந்தது வைகோலுக்கு தடை!
திருப்போரூர்:
சாலையில் போடப்பட்டிருந்த வைக்கோலில் முதல்வர் ஜெயலலிதாவின் கார் சிக்கியதால் இனிமேல் சாலையில் வைக்கோல் காய வைக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
கடந்த வாரம் முதலமைச்சர் ஜெயலலிதா தனது உயிர்த்தோழி சசிகலாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் முகாமிட்டிருந்தார். இங்கு சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்பினார்.
பையனூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, நெல்லை பிரித்தெடுப்பதற்காக சாலையில் விவசாயிகள் வைக்கோலை பரப்பி வைத்திருந்தனர்.
இந்த வைக்கோல், முதல்வரின் காரில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புக்காக வந்த போலீஸார் ஓடி வந்து வைக்கோலை அகற்றிய பிறகே முதல்வரின் கார் அங்கிருந்து செல்ல முடிந்தது.
இச் சம்பவத்தையடுத்து செங்கல்பட்டு மண்டல நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர், மாமல்லபுரம் மற்றும் திருப்போரூர் காவல் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், நெடுஞ்சாலைத் துறை சாலைகளில் விவசாயிகள் வைக்கோல் போர் போட்டு அடித்தல், காய வைத்தல் போன்ற பணிகளை செய்வதாகவும் அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே சாலைகளில் வைக்கோல் காய வைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications