நெல்லை, குமரியில் வெயில் கொளுத்தும்!
திருநெல்வேலி:
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் இந்த கோடை காலம் மிகக் கடுமையாகஇருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்போதே கோடை காலம் தொடங்கி விட்டது. தலைநகர் சென்னை முதல் கடைக்கோடி குமரி வரைவெயில் கடுமையாக இருக்கிறது. அதிகபட்ச வெயில் சேலம், வேலூர் நகரங்களில் தொடர்ந்து பதிவாகி வருகிறது.இரு நகரங்களிலும் இப்போதே 100 டிகிரி அளவுக்கு வெயில் அடிக்கிறது.
இந்த ஆண்டு தென் மாவட்டங்களில்தான் குறிப்பாக, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்தான்கோடை காலம் மிகக் கடுமையாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று மாவட்டங்களிலும் கடும் வெயில் அடித்து வருகிறது. அதை விடக் கொடுமையாக குடிநீருக்கு கடும்பற்றாக்குறை நிலவி வருகிறது. நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வற்றாத ஜீவ நதியாக கூறப்படும் தாமிரபரணி ஆறு மிகவும் சுருங்கிப் போய் விட்டது. சின்ன ஓடை போல இந்த நதிகாணப்படுகிறது. வெயில் கூடக் கூட இதுவும் வற்றும் அபாயம் உள்ளதாக நெல்லை மாவட்டத்தினர் மத்தியில் பீதிஏற்பட்டுள்ளது.
குற்றாலத்துக்கு அருகே இருக்கும் செங்கோட்டையிலும் குடிநீர்ப் பிரச்சினை இப்போதே தலைவிரித்தாடுகிறது.தென்காசியிலும் இதே நிலைதான்.
குமரி மாவட்டத்தில் தலைநகர் நாகர்கோவிலில் நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர்விநியோகிக்கப்படுகிறது. ஆனால் குடிநீருக்கு பெரிய அளவில் பிரச்சினை வராது என்று நகராட்சி ஆணையர்கூறினாலும் கூட குடிநீர் போதிய அளவில் கிடைக்கவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
"அதிகாரப்பூர்வமாக" கோடை தொடங்குவதற்கு முன்பே இப்படியென்றால் கோடை தொடங்கிய பிறகு நிலைமைஎன்னவாகுமோ என்ற பயம் தென் மாவட்ட மக்களிடையே நிலவி வருகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications