முழு பலத்தில் பாக். கிரிக்கெட் அணி: அக்ரம்
கொல்கத்தா:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடியதன் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் முழு பலத்துடன் காணப்படுகின்றனர்என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இந்திய அணிக்கு நெருக்கடி தர எங்கள் வீரர்கள் தவறி விட்டனர். அதற்கு இம்முறை பதிலடி தருவார்கள்என்று எதிர்பார்க்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடியதன் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் முழுபலத்துடன் காணப்படுகின்றனர்.
இந்திய அணி அண்மையில் எந்த மிகப் பெரிய அணிக்கு எதிராகவும் விளையாடவில்லை. இதனால் அவர்கள் நன்றாக ஆடுவார்கள்என்பது கேள்விக்குறி தான். மேலும் சொந்த மண்ணில் போட்டி நடப்பது இந்திய வீரர்களுக்கு அதிக நெருக்கடி அளிக்கும்.
இருப்பினும் சச்சின், கங்குலி, டிராவிட், சேவக் ஆகியோர் எந்த நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர்கள்.முறையான பயிற்சி இல்லாவிட்டால் இவர்களை சமாளிப்பது கடினம் என்று கூறினார்.
இதற்கிடையே சொந்த மண்ணில் விளையாடுவதால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று இந்திய அணி கேப்டன் கங்குலிபதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
