இது சர்வாதிகாரம்: கருணாநிதி
சென்னை:
திமுக எம்எல்ஏக்களை ஒட்டுமொத்தமாக, குண்டுக்கட்டாக சட்டசபையில் இருந்து வெளியேற்றியதன் மூலம் இங்கு நடப்பது சர்வாதிகாரஆட்சி என்பது உறுதியாகிவிட்டது என கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த அராஜக செயலை எல்லோரும் கண்டிப்பார்கள். சட்டமன்ற மரபுப்படி 110வது விதியின் கீழ் அறிக்கை படிக்கும்போது அதில்யாரையும் குற்றம் சாட்டக் கூடாது. அந்த மரபை தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா செயல்பட்டிருக்கிறார்.
அப்படியே குற்றம் சாட்டினாலும், குற்றம் சாட்டப்பட்ட அவை உறுப்பினர் தனது நிலையை விளக்க அனுமதி தர வேண்டும். இங்கு அந்தஅனுமதியும் ஆற்காடு வீராசாமிக்குத் தரப்படவில்லை.
ஆற்காடு வீராசாமி பேசுவதற்கு அனுமதி கோரினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை சபாநாயகர் அவையை விட்டுவெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறார். இது ஜனநாயகம் அல்ல. இங்கு நடப்பது சர்வாதிகாரம் என்று கூறியுள்ளார்.
ஸ்டாலினை கொல்ல சதி: ஆற்காடு
சட்டசபை சம்பவம் குறித்து ஆற்காடு வீராசாமி கூறுகையில்,
விளம்பர போர்டு நட என் தம்பி நடத்தி வரும் நிறுவனத்தினர் மரக் கிளையை ஆட்கள் வெட்டினார்கள். அந்த மரக் கிளையின் மதிப்பு ரூ. 50என்று தெரிந்தவுடன் அந்த வழக்கை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
இதைத் தான் பெரிய குற்றமாக முதல்வர் பேசினார். நான் பதில் சொல்ல அனுமதி தரவில்லை.
நான் மீண்டும் கூறுகிறேன். ஸ்டாலினைக் கொல்ல திட்டமிடுகிறார்கள். இதற்காக கடலூர் சிறையில் குண்டர் சட்டத்தில் உள்ள ஒருவரைவெளியில் விட்டு, ஸ்டாலினைக் கொன்றுவிட்டு பழியை அழகிரி மீது போட முயல்கிறார்கள். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
இதை நான் பொதுக் கூட்டத்தில் தெரிவித்ததால், உண்மை வெளியாகிவிட்ட ஆத்திரத்தில் என் தம்பியின் நிறுவனம் மீது ஒரு வழக்கைப்போட்டு, பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறார்கள்.
சிறுதாவூரில் ஜெயலலிதா ரூ. 250 கோடியில் பங்களா கட்டியிருக்கிறார். இந்த உண்மை வெளியே வர ஆரம்பித்துவிட்டது. இதையெல்லாம்சட்டசபையில் ஸ்டாலின் இன்று பேசுவதாக இருந்தது. அதைத் தடுக்கவே எங்களை வெளியேற்றினார்கள்.
ஞானசேகரன் (காங்கிரஸ்):
காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் கூறுகையில், தமிழ்நாட்டில் எத்தனையோ கொலைகள் நடக்கின்றன. அதைப் பற்றி சட்டசபையில் பேசஅனுமதிப்பதில்லை. மரக் கிளையை வெட்டியதற்காக 110 வது விதியின் கீழ் முதல்வர் அறிக்கை வாசிப்பது வெட்கக்கேடு.
முதல்வரின் வீட்டில் நரியை சுட்டிருக்கிறார்கள். இதற்கு 110வது விதியின் விளக்கம் தருவாரா ஜெயலலிதா? என்றார்
நாடாளுமன்றத்தில் புகார்:
தமிழக சட்டசபை விவகாரம் இன்று மக்களவையிலும் வெடித்தது. தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக திமுக,மதிமுக எம்பிக்கள் பேசினர்.
இதையடுத்து இது குறித்து உள்துறை அமைச்சருடன் பேசுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்உறுதியளித்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications