அமைச்சர் காரை வழிமறிப்போம்: மாணவர்கள்
சென்னை:
சென்னை அரசுக்கல்லூரி மாணவ, மாணவிகள், இன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடம்முன்பு திடீர் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 25 மாணவிகள் உட்பட 150 க்கும் மேற்பட்டகல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய மாணவர் சங்க தென்சென்னை மாவட்ட தலைவர் குமார்பேசும்போது, தமிழக அரசு சார்பில் மூலை முடுக்கெல்லாம் சாராயக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் 34 ஆண்டுகளாக ஒரு அரசு கல்லூரி கூட திறக்கப்படவில்லை. ஆனால் கல்விக்கட்டணம் மட்டும் வருடம்தோறும் உயர்த்தப்படுகிறது. எந்த அரசு கல்லூரியிலும் பாத்ரூம் வசதி கிடையாது.
ஆனால் ஜெயலலிதா கலந்து கொள்ளும் அரை மணி நேர விழாவுக்கு கூட 5 லட்சம் ரூபாய் செலவில் பாத்ரூம்கட்டுகிறார்கள் என்றார்.
இதன்பிறகு மாநிலத் தலைவர் செல்வா பேசுகையில், தமிழக கல்வி அமைச்சர் சட்டசபையில் பேசும்போது,தமிழகத்தில் இனிமேல் புதிதாக அரசுக்கல்லூரிகள் தொடங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளார்.
எந்த அமைச்சருக்கும் இல்லாத தைரியம் இவருக்கு வந்துள்ளது. இதை இந்திய மாணவர் சங்கம் பார்த்துக் கொண்டுசும்மா இருக்காது. எந்த நேரத்திலும் அமைச்சர் செல்லும் காரை வழிமறிப்போம் என்று எச்சரிக்கிறோம்.
அதிகரித்து வரும் மாணவர்களின் தேவையைக் கருத்திற் கொண்டு புதிய கல்லூரிகளை தொடங்க வேண்டும்.காலியாக உள்ள 4,800 ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணி என்ற அடிப்படையில் நியமிக்க வேண்டும்என்றார்.
இதன் பிறகு மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் கருணாநிதியிடமும். கல்வித்துறை செயலாளர்ஞானதேசிகனிடமும் கோரிக்கை மனுவை அளித்தனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications