சோனியாவின் பினாமி பட்ஜெட்: ஜெ. கடும் தாக்கு
சென்னை:
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சோனியா காந்தியின் பினாமி பட்ஜெட் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்பேசுகையில்,
இந்த அரசில் அமைச்சர்களுக்கு உரிய பங்கு தரப்படுவதில்லை. அரசு அதிகாரிகளைத்தான் மாண்புமிகு என்று அழைக்கவேண்டும் போலிருக்கிறது. அன்மையில் நடந்த காவல்துறை விழாவில் மேடையில் தலைமைச் செயலாளர் அமர்ந்திருக்கிறார்.அமைச்சர்கள் யாரும் அமர வைக்கப்படவில்லை.
உளவுத்துறை தகவல்களை வைத்து ஆளும்கட்சியினர் இயக்கப்படுகிறார்கள். அண்ணா வழியில் நடப்பதாக சொல்கிறீர்கள்.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அவரது வழி.
வரியைக் குறைத்து வசதிகளைப் பெருக்குவது அண்ணாவின் கொள்கை. ஆனால், நீங்கள் வரியைக் கூட்டி வசதிகளைக்குறைக்கிறீர்கள்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் தான் நிதியமைச்சர் பொன்னையன் பட்ஜெட்டையே போட்டுள்ளார். இதுநிதியமைச்சரின் பட்ஜெட் அல்ல, பினாமி பட்ஜெட் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, எனது வழிகாட்டுதலின்பேரில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஆர்.பிகூறுகிறார். அதில் ஒரு தவறும் இல்லை. இந்த மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் நிதி நிலை அறிக்கை தயாரிப்புக்கு வழிகாட்ட எனக்கு சட்டரீதியாக முழு உரிமை உண்டு.
இங்காவது நான் முதலமைச்சராக உள்ளேன். ஆனால் எந்தவித அரசுப் பொறுப்பிலும் இல்லாத சோனியா காந்தியின்வழிகாட்டுதலின் பேரில் மத்திய நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதே, அதற்கு எஸ்.ஆர்.பி. என்ன பதில் கூறப் போகிறார்?
அதுதான் உண்மையிலேயே பினாமி பட்ஜெட், சோனியாவின் பினாமி பட்ஜெட் அது என்றார் காட்டமாக.
எஸ்.ஆர்.பி: மொத்தத்தில் இந்த அரசு அண்ணா வழியில் நடக்கவில்லை.
ஜெயலலிதா: அரசு விழாவில் அனைவரையும் மேடையில் அமர வைக்கும் பழக்கம் இல்லை. நான் முதல்வராக மட்டுமல்லகாவல்துறைக்கு மந்திரியாகவும் இருக்கிறேன். அதனால் மேடையில் அமர்ந்தேன். சட்டம்-ஒழுங்குக்கு பொறுப்பானவர்கள்தலைமைச் செயலாளர் தான். அதனால் அவர் என் பக்கத்தில் அமர்ந்தார் என்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications