மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய திமுகவினர்: உதவிய டி.ஆர். பாலு- ஜெ. குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலீஸாரால் கைது செய்யப்பட்ட செக்ஸ் சாமியார் சதுர்வேதியின் சட்ட ஆலோசகரான வழக்கறிஞர்தாமோதரனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதுர்வேதிக்கு ஆதரவாக வழக்குகளில் ஆஜராகி வரும் தாமோதரனை, போலீஸார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து தாமோதரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் ஆஜரானார்.

நீதிபதி தணிகாச்சலம் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது பிரபாகரன் வாதிடுகையில்,

முதல் தகவல் அறிக்கையில் தாமோதரன் பெயர் இல்லை. 2 மாதங்களாக அவர் சதுர்வேதி வழக்கில் போலீஸாருக்குஉதவியாக இருந்து வந்தார் தாமோதரன். இந் நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறி போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைசாமி வாதிடுகையில் சதுர்வேதி நடத்தி வந்த அறக்கட்டளையின்செயலாளராக தாமோதரன் உள்ளார். பக்தர்களிடம் அறக்கட்டளையின் பெயரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கானபணம் வசூலித்துள்ளார். அவரை நிபந்தனையின் பேரில் ஜாமீனில் விடுக்க அரசுத் தரப்புக்கு ஆட்சேபம் இல்லைஎன்றார்.

இதையடுத்து வாரம் ஒருமுறை சைதை நீதிமன்றத்தில் தாமோதரன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன்தாமோதரனை நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.

9ம் தேதி கைது செய்யப்பட்ட தாமோதரன் 10ம் தேதியே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+