மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய திமுகவினர்: உதவிய டி.ஆர். பாலு- ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
திண்டுக்கல்லில் 2 நாள் நடக்கப் போகும் திமுக மண்டல மாநாட்டிற்காக 100 ஆண்டு பழமை வாய்ந்த ஏராளமான மரங்களைதிமுகவினர் வெட்டிச் சாய்த்துள்ளனர். மரங்களை வெட்டுவதில் இந்தக் கட்சியினர் விஞ்ஞான ரீதியில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடினார்.
சட்டசபையில் இன்று பேசிய திமுக உறுப்பினர் ஸ்டாலின், ஒரு மரக் கிளையை வெட்டியதற்கு முதலமைச்சர் 110வது பிரிவின் கீழ்அறிக்கை படித்தார். புகைப்படத்தைக் காட்டினார். என்னிடமும் புகைப்படம் இருக்கிறது. அண்ணாநகரில் விளம்பரப் பலகைவைக்கும்போது வெட்டப்பட்ட மரக் கிளையின் படம் அது. தேனி, கம்பம், பெரியகுளம் காட்டுப் பகுதியில் தேக்கு மரங்கள்வெட்டப்பட்டு கடத்தப்படுகின்றன. இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கேட்டார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
மரம் வெட்டியது குறித்து திமுகவினர் பேசக் கூடாது. திண்டுக்கல் அருகே, திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில்திண்டுக்கல்லிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ஓடைப்பட்டி என்ற இடத்தில் திமுக மண்டல மாநாடு வரும் 12, 13 ஆகியதேதிகளில் நடைபெறுகிறது.
இதற்காக ஏராளமான அத்துமீறல்களுடன் ஏற்பாடுகளை படு சுறுசுறுப்பாக திமுகவினர் செய்து கொண்டுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையின் இருபுறம் உள்ள அரசுக்குச் சொந்தமான ஏராளமான மரங்களை அவர்கள் வெட்டிச் சாய்த்துள்ளனர்.இருபுறம் கம்பங்களை ஊண்டி, கட்சிக் கொடிகளை பறக்க விட்டுள்ளனர்.
மாநாடு நடக்கும் இடத்திற்குச் செல்லும் பிரமாண்ட நுழைவாயிலை அமைக்க இடையூறாக இருந்த, நன்கு வளர்ந்த ஏராளமானமரங்களை வெட்டித் தள்ளியுள்ளனர், பல மரங்களை மொட்டையடித்துள்ளனர். அந்த மரங்களில் சீரியல் விளக்குகளைபோட்டுள்ளனர்.
மரங்களை வெட்டுவதில் விஞ்ஞான ரீதியில் விளையாடியுள்ளனர் திமுகவினர். மக்களுக்கும், இயற்கைக்கும் பலனாக இருக்கும்,ஆனால் தங்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களின் வேர்ப் பகுதியில் ஆசிட் ஊற்றியுள்ளனர்.
பின்னர் அந்த மரங்கள் பட்டுப் போன பின் அவற்றை வெட்டி விடுமாறு கூறி, தனிக்கம்பட்டி பஞ்சாயத்து மூலம் தீர்மானம்நிறைவேற்றி அதை தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அந்த மரங்களை வெட்டியுள்ளனர்.
இந்தச் செயல்களுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு ஏராளமாக உதவி செய்துள்ளார்.
இதுதவிர கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் தங்குவதற்காக 80 ஏக்கர் விளை நிலத்தை பாழ்படுத்தி, மண் மேடாக்கிஅங்கு சகல வசதிகளும் நிறைந்த சொகுசு அறைகளை அமைத்துள்ளனர்.
இதுதவிர வாகனங்களை நிறுத்தவும் பல ஏக்கர் விளை நிலங்களை பாழ்படுத்தியுள்ளனர். 2 நாள் மாநாட்டுக்கு இத்தனை நாசத்தைஏற்படுத்துவது நியாயம்தானா என்பதை திமுகவினர்தான் கூற வேண்டும் என்றார் ஜெயலலிதா.
இதையடுத்துப் பேசிய திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், மரங்கள் வெட்டப்பட்டால் நடவடிக்கை எடுங்கள். அதிகாரிக்குஆணையிடுங்கள். தவறு நடந்தது உண்மையாக இருந்தால் உடனே நடவடிக்கை எடுங்கள். மாநாட்டிற்காக மரங்கள்வெட்டப்படுவது உண்மை தான். இதை அனைத்துக் கட்சிகளும் தான் செய்கின்றன. ஆனால், முறைகேடாக நாங்கள்செய்திருந்தால், திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் சொல்கிறேன், எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்றார்.
அப்போது பேசிய ஜெயலலிதா, மரங்கள் வெட்டியதை பேராசிரியர் நியாயப்படுத்த முயற்சி செய்கிறார். மரங்கள் தேசியநெடுஞ்சாலையில் உள்ளவை. அதில் மாநில அரசால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிந்தே இவ்வாறு பேசுகிறார்என்றார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications