உலகின் 3வது பெரும் பணக்காரர் லட்சுமி மிட்டல்
நியூயார்க்:
உலகின் பெரும் பணக்காரர்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார் இந்தியரான லட்சுமி மிட்டல்.
முதலிடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ், இரண்டாவது இடத்தில் அமெரிக்கத் தொழிலதிபரானவாரன் பபே ஆகியோர் உள்ளனர்.
உலக பணக்காரர்களின் பட்டியலை பிரபல அமெரிக்க இதழான போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில் பில் கேட்ஸ், தொடர்ந்து 11வது ஆண்டாக தனது முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார். இவரதுசொத்து மதிப்பு, 46.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அமெரிக்கத் தொழிலதிபரான வாரன் பபேவிடம் 44 பில்லியன் அமெரிக்கடாலர் சொத்துக்கள் உள்ளன.
இவர்களுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தைப் பிடித்துள்ளார் உலகெங்கும் இரும்பு, எஃகு தொழிற்சாலைகளைவாங்கிக் குவித்து வரும் லண்டனில் வசிக்கும் இந்தியரான லட்சுமி மிட்டல்.
இவரது சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இவரது சொத்து 18.8பில்லியன் டாலர்களாக இருந்தது. அப்போது இவர் 62வது இடத்தில் இருந்தார். ஒரே வருடத்தில் 59 பேரைபின்னுக்குத் தள்ளிவிட்டு இவர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
மெக்ஸிகோவைச் சேர்ந்த கார்லோஸ் 4வது இடத்தை பிடித்துள்ளார். இவர் கடந்த வருடம் 17வது இடத்தில்இருந்தார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்வலீத் பின் தலால் 5வது இடத்திலும், ஸ்வீடனைச் சேர்ந்த இங்க்வாட்கம்ப்ராட் 6வது இடத்திலும் உள்ளனர்.
விப்ரோ தலைவர் ஆஸிம் பிரேம்ஜி 38வது இடத்தில் உள்ளார். கடந்த வருடம் இவர் 58வது இடத்தில் இருந்தார்.இவரது சொத்து மதிப்பு 9.3 பில்லியன் டாலர்கள். ஆதித்ய பிர்லா, 149வது இடத்தில் உள்ளார். கடந்த முறை147வது இடத்தில் இருந்த இவரது சொத்து மதிப்பு 3.7 பில்லியன் டாலர்கள்.
இது தவிர இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்களான சுனில் மிட்டல் 164வது இடத்திலும், பலோன்ஜி மிஸ்ட்ரி170வது இடத்திலும், கோத்ரெஜ் குரூப் தலைவர் ஆதி கோத்ரெஜ் 355வது இடத்தையும் பிடித்து உலகின் பெரும்பணக்காரர்களாகத் திகழ்கின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications