நான் குட்டி தலைவன் அல்ல, தொண்டன்: ஸ்டாலின்
சென்னை:
நான் குட்டித் தலைவனும் இல்லை, வெட்டித் தலைவனும் இல்லை, திமுகவின் சாதாரண தொண்டன் என்று ஸ்டாலின் பேசினார்.
சட்டசபையில் இன்று ஸ்டாலின் பேசியதாவது:
மூன்று நாட்களுக்கு முன் இந்த அவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, எனக்கு திமுகவின் குட்டித் தலைவர் என்ற பட்டம்வழங்கினார். நான் குட்டித் தலைவனோ, வெட்டித் தலைவனோ, பெரிய தலைவனோ, சின்னத் தலைவனோ அல்ல. நான்திமுகவின் தொண்டன். அப்படியே இருக்கவும் விரும்புகிறேன்.
விரைவில் தேர்தல் வரும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த பட்ஜெட்டை பார்த்த பிறகு அடுத்த ஆண்டு தான்தேர்தல் வரும் என்று மக்கள் கருதுகிறார்கள்.
கடந்த ஆண்டு குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 6,400 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இது ரூ. 5,200 ஆககுறைக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பொன்னையன் (இடைமறித்து): பட்ஜெட்டின் ஒரு பகுதியை மட்டும் படித்துவிட்டுப் பேசக் கூடாது. முழுதாகப்படிக்க வேண்டும். கடந்த ஆண்டை விட கூடுதலாகத் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் திட்டங்களைஅறிவித்துவிட்டு நிதி ஒதுக்காமல் போய்விட்டீர்கள்.
ஸ்டாலின்: நீங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டபெரியார் சமத்துவபுரம் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உள்ளிட்டவற்றை இந்த ஆட்சி விறுத்தி விட்டது. திமுகஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட நமக்கு நாமே திட்டத்தைத் தான் நமது கிராமம் என்ற பெயரில் புதிய திட்டம் மாதிரிபட்ஜெட்டில் அறிவித்துள்ளீர்கள்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: சமத்துவபுரம் திட்டத்தால் ஏழைகள் கடனாளியனார்கள்.
ஸ்டாலின்: சாலைப் பணியாளர்கள் மீண்டும் வேலை கேட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு வேலைவழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை அதை அரசு ஏற்கவில்லை. வேலையிழந்த 45 தொழிலாளர்கள்தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
மதமாற்றத் தடைசட்டம் வாபஸ் பெற்றது குறித்து திமுக உறுப்பினர் பொன்முடி பேசுகையில் அவருக்கு பதில் அளித்தமுதலமைச்சர் ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் விருப்பப்படி ஆட்சி செய்ய வேண்டும். வளைந்து கொடுத்து ஆட்சி செய்யவேண்டும் என்றார்.
அதன்படி வளைந்து கொடுத்து இந்த சாலைப் பணியாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்.
2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லையே. மக்கள் இவ்வாறு தீர்ப்புஅளித்ததற்கு உங்கள் தவறான ஆட்சிதானே காரணம்?
2001ல் நீங்கள் ஜெயித்தபோது திமுகவின் தோல்விக்கு திமுக அரசின் செயல்பாடுதான் காரணம் என்று முதல்வர் சொன்னார்.இதனால் நானும் அதே கருத்தைக் கூறுகிறேன்.
அமைச்சர் பொன்னையன்: 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாலும், 18 லட்சம் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாலும் தான்அந்த வெற்றி உங்களுக்குக் கிடைத்தது. வரும் தேர்தலில் அம்மா தான் வெற்றி பெறுவார்.
முதல்வர் ஜெயலலிதா: 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூடஜெயிக்கவில்லையே. அப்போதைய திமுக ஆட்சியின் செயல்பாடுதான் அதற்குக் காரணமா? என்று கேட்டார்.
ஸ்டாலின்: திமுக ஆட்சிக்காலத்தில் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகளுக்கு தமிழக அரசு பட்டா வழங்காமல்இழுத்தடிக்கிறது.
அமைச்சர் பன்னீர்செல்வம்: திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பட்டாக்களை வாங்கியவர்களுக்கு அதற்குரிய நிலம் எந்தஇடத்தில் இருக்கிறது என்றே தெரியவில்லை.
ஜெயலலிதா: கடந்த திமுக ஆட்சியில் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகளைக் கொடுத்தார்கள். ஆனால் அதில் வீடு கட்டயாராலும் முடியவில்லை. காரணம் அடிப்படைக் கட்டமைப்பு எனப்படும் சாலை வசதி, மின்சார வசதி என எதுவும் திமுகஅரசினால் வழங்கப்படவில்லை.
இதனால் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு கொள்கை முடிவை எடுத்தது. அதன்படி ஏற்கனவே வழங்கப்பட்ட இலவசவீட்டு மனைகளில் வீடுகள் கட்ட வசதியாக, சாலை வசதி, குடிநீர் இணைப்புகள், மின்வசதி ஏற்படுத்தித் தர முடிவு செய்து அதைநடைமுறைப்படுத்தி வருகிறோம்.
வீட்டு மனைகளுக்குரிய பட்டாக்களை அதிமுக அரசு தற்போது வழங்கி வருகிறது.
திமுக உறுப்பினர் துரைமுருகன்: வீட்டு மனைப் பட்டாக்கள் கொடுத்ததை வரவேற்கிறேன். அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் ரோடு,மின்சாரம், குடிநீர் வசதி செய்து கொடுத்து விட்டீர்களா?
ஸ்டாலின்: இந்த பட்ஜெட்டை மலர்க் கொத்து என்று முதல்வர் சொன்னார். ஆமாம், இது மலர்க் கொத்து தான் நானும் ஒப்புக்கொள்கிறேன். வாசம் இல்லாத காகிதப் பூங்கொத்து இந்த பட்ஜெட். எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்தை காலி டப்பா என்றுஜெயலலிதா சொன்னார். இந்த பட்ஜெட் தான் காலிடப்பா.
ஜெயலலிதா: காகிதப்பூ என்று ஸ்டாலின் சொன்னார். அதை நான் வரவேற்கிறேன். மற்ற பூக்கள் ஒரே நாளில் அழிந்து போகும்.இந்தப் பூக்கள் நிரந்தரமானவை, மக்கள் மனதில் நிரந்தரமாக இருக்கும்.
ஸ்டாலின்: காதிதப் பூ மணக்காது, அது மாதிரி இந்த பட்ஜெட் மக்களுக்கும் பயன்படாது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு காலிபெருங்காய டப்பா என்றார்.












Click it and Unblock the Notifications