வீரப்பன் : விசாரணையை முடிக்க மேலும் 3 வார அவகாசம்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கொல்லப்பட்டது தொடர்பான ஆர்.டி.ஓ. விசாரணையைமுடிக்க மேலும் 3 வார கால அவகாசம் கொடுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
வீரப்பன் கொலை தொடர்பான தர்மபுரி ஆர்.டி.ஓ. விசாரணையை மார்ச் 7ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில், தர்மபுரி ஆர்.டி.ஓ.சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வீரப்பன்கொலை தொடர்பான விசாரணையில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்து விட்டது. ஆனால் தடய அறிவியல்துறையினரின் அறிக்கை மட்டும் வர வேண்டியுள்ளது. எனவே விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைஎன்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் விசாரித்து, மேலும் 3 வார கால அவகாசம் கொடுத்துஉத்தரவிட்டனர்.
அதேசமயம், தன் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து அதிரடிப்படைத்தலைவர் விஜயக்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், விஜயக்குமாரின்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.
மேலும் இதுதொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications