தேர்தலுக்கு தயாரவோம்: திமுகவினருக்கு அன்பழகன் அழைப்பு
திண்டுக்கல்:
சட்டசபைத் தேர்தலுக்கு திமுகவினர் இப்போதே தயாராக வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் நேற்று தொடங்கிய மண்டல மாநாட்டின் முதல் நாள் நிறைவாக அன்பழகன் உரையாற்றினார். அவரது பேச்சு:
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழ் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பெரும் கடமையை திமுக ஏற்றுக் கொண்டிருக்கிறது.அதனால்தான் இன்னும் அது ஏறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழர்களை ஒரு குடும்பமாக மாற்றும் மாபெரும் பணி நமக்கு உள்ளது. சாதி உணர்வு ஒழிய வேண்டும், தமிழின உணர்வு வளர வேண்டும்.அண்ணா விரும்பிய அந்த லட்சிய, தியாகக் குடும்பத்தை ஏற்படுத்தும் அணியைத்தான் உருவாக்கியுள்ளோம்.
பெண்ணடிமைத்தனம், தீண்டாமை ஒழிய வேண்டும். தமிழர்களுக்கு இன உணர்வு வளர வேண்டும். தமிழுக்கு செம்மொழி என்ற உரியதகுதியை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.
மரம் வெட்டுகிறார்கள் என்று நம்மைப் பார்த்துக் கூறியுள்ளார் ஜெயலலிதா. உண்மையில் மரம் வெட்டியிருந்தால் நடவடிக்கை எடுங்கள்என்றுதான் கூறினேன். ஏதோ இந்த மாநாட்டின் விளம்பரச் செயலர் போல முதல்வர் பேசுகிறார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. திமுக தொண்டர்கள் அதற்கு இப்போதே தயாராக வேண்டும். தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்காகத்தான் இந்த மாநாடு. ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தை காப்பாற்றமுடியாது என்றார் அன்பழகன்.
முன்னதாக மாநாட்டு மலரை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட அன்பழகன் பெற்றுக் கொண்டார். நடிகர் சந்திரசேகர் நடித்த பேனா ஒருபோர்வாள் என்ற நாடகம் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications