திமுக மாநாடு: கருணாநிதி இன்று பேசுகிறார்
திண்டுக்கல்:
தமிழகத்தில் தற்போது உள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நீடிக்கும், அதே சமயம் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பேஇல்லை என்று திமுகவின் திண்டுக்கல் மாநாட்டில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் தென் மண்டல மாநாடு திண்டுக்கல்லில் நேற்று காலை தொடங்கியது. மாநில மாநாடு அளவுக்கு பிரமாண்டமாக தொடங்கியுள்ளஇந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான திமுகவினர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கூட்டத்தில் பேசியவர்கள், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து பெரியஅளவில் பேசவில்லை. மாறாக, கூட்டணி குறித்து அதிகம் பேசினர், குறிப்பாக கூட்டணி ஆட்சிக்கு எதிரான கருத்தை அதிகம்வலியுறுத்தினர்.
மேலும், சட்டசபைத் தேர்தல் விரைவில் வரலாம் என்பதையும் பேச்சாளர்கள் கூறத் தவறவில்லை.
மாநாட்டுத் திறப்பாளரான முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் பேசுகையில், தலைவர் கருணாநிதி
தலைமையில் மீண்டும் திமுக ஆட்சிப் பீடத்தில் ஏற வேண்டும். பெயார், அண்ணாவின் கொள்கைகள் அப்போதுதான் முழுமையாகநிறைவேற முடியும் என்றார்.
தமிழகத்தில் தனிக் கட்சி ஆட்சிதான் ஏற்பட முடியும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் சிலர் அழுத்தம் திருத்தமாகதெரிவித்தனர். இது காங்கிரஸ் கட்சியினருக்கு அளிக்கும் பதிலாக அமைந்தது.
இன்று இரண்டாவது நாள் மாநாடு நடக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி இன்று இரவு 8 மணியளவில் நிறைவுரையாற்றுகிறார். கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications