சுனாமி: புதுச்சேரி கிராமத்தையும் தத்தெடுக்கிறார் விவேக் ஓபராய்
சென்னை:
தமிழகத்தைப் போலவே, பாண்டிச்சேரியிலும் ஒரு கிராமத்தைத் தத்தெடுக்கப் போவதாக நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கிராமத்தை நடிகர் விவேக் ஓபராய் தத்தெடுத்து அதைசீரமைத்து வருகிறார். அங்கு நிரந்தர வீடுகளையும் கட்டிக் கொடுக்கவுள்ளார்.
விவேக்கின் மனிதாபிமான பணிகளைப் பாராட்டி அவருக்கு ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சுனாமி தாக்குவதற்கு முன்பு வரை அங்கு வாழ்ந்தவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருந்தவர்கள்.எனவே அவர்களது கெளரவம் பாதிக்கப்படாத வகையில் அவர்களைக் கையாள வேண்டும்.
பாதிக்கப்பட்ட தேவனாம்பட்டினம் கிராமத்தில் சுனாமியால் 430 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 270 பேர் உயிரிழந்தனர். இங்கு 40பேருக்கு கண் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதய அறுவைச் சிகிச்சை மூலம் மறு வாழ்வு பெற்ற தேவனாம்பட்டினம்சிறுவன் முகத்தில் புன்னகையைப் பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதியே ஏற்பட்டது.
தேவனாம்பட்டினம் கிராமத்தை மீண்டும் பழையபடி மாற்றும் வரை தேவையான உதவிகளைச் செய்யவுள்ளேன் என்றார் ஓபராய்.
விவேக் ஓபராய்க்கு ரோட்டரி கவர்னர் பெஞ்சமின் செரியன் விருதை வழங்கினார். பான்யன் தொண்டு நிறுவனத்தின் வந்தனாவுக்கும்விருது வழங்கப்பட்டது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications