கராத்தேவை அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்!
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தே தியாகராஜனை அடிக்க திமுகவினர் பாய்ந்ததால் பெரும் அமளிஏற்பட்டது.
மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடந்தது. துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் பெரும்களேபரம் மூண்டது.
திமுகவைச் சேர்ந்த உறுப்பினர் கல்யாண சுந்தரம் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்து அதிமுக உறுப்பினர் வெற்றிவேல்பிரச்சினை எழுப்பினார்.
அவர் பேசுகையில், திமுகவினர் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே, திமுக மண்டல மாநாட்டுக்குதிமுகவினர் சென்றிருந்த வேளையில் மாநகராட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக கல்யாண சுந்தரம் கூறியுள்ளதாக வெற்றிவேல்தெரிவித்தார்.
இதற்கு கல்யாணசுந்தரம் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், ஆமாம் அப்படித்தான் நடந்துள்ளது. நடந்ததைத் தானே சொன்னோம்என்றனர்.
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திமுக மண்டல மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைதூக்கிக் காட்டிய கராத்தே தியாகராஜன் ஏதோ கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் கராத்தேவை நோக்கிப் பாய்ந்தனர். அவரது மேஜையை அவர்கள்தள்ளியதையடுத்து கராத்தே பதறியடித்தபடி எழுந்து நின்றார்.
அவரது இருக்கைக்கு முன்பாக திமுகவினர் கூடி கடுமையாக சப்தமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போட்டிக்குஅதிமுகவினரும் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து திமுகவினரை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு கராத்தே தியாகராஜன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்துதிமுக கவுன்சிலர்களை குண்டுகட்டாகத் தூக்கி போலீஸார் வெளியேற்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications