பெங்களூர் நீதிமன்றத்தில் சுதாகரன் மட்டும் ஆஜர்: ஜெ-சசி வரவில்லை
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தொடங்கியது. ஆனால், மாஜிவளர்ப்பு மகன் சுதாகரன் மட்டுமே நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
வருமானத்திற்கு மீறிய வகையில் ரூ. 66.65 கோடி அளவுக்கு சொத்து சேர்த்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்மீதும், சில காலத்துக்கு முன்பு வரை சும்மா திரிந்து இப்போது லண்டனில் ஹோட்டல் வாங்கும் அளவுக்கு திடீர் பில்கேட்ஸ் ஆகமாறிய தினகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது.
நீண்ட காலதாமத்துக்குப் பின் இன்று இந்த இரு வழக்குகளும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி பச்சாபுரேமுன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அரசுத் தரப்பு வழக்கறிஞராக, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட, மூத்த வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யா ஆஜரானார்.
இந்த வழக்கு விசாரணைக்கு இன்று நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு சம்மன்அனுப்பப்பட்டது. ஆனால், மாஜி வளர்ப்பு மகனும் சிவாஜி வீட்டு மருமகனுமான சுதாகரன் மட்டுமே இன்று நேரில் ஆஜரானார்.ஜெயலலிதா உள்ளிட்ட மற்ற நால்வரும் ஆஜராகவில்லை.
விசாரணை தொடங்கியதும் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் சார்பில் நீதிமன்றத்தில் மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டன. அதில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றுகோரப்பட்டிருந்தது.
ஜெயலலிதா, சசிகலாவின் சார்பில் ஆஜரான ராஜ்யசபா எம்பியும் மூத்த வழக்கறிஞருமான ஜோதி,
இந்த வழக்கு சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது. அவ்வளவு தான். இந்த வழக்கில் இருந்துஜெயலலிதாவையும் சசிகலாவையும் விடுவித்து சென்னை உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவு இன்னும் அமலில் உள்ளது.இதனால் அவர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நன்கு அடையாளம் தெரிந்த நபர்கள் தான் என்பதால், அவர்கள் இன்று நேரில் வர வேண்டியஅவசியமில்லை என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதி பச்சேபுரா, முதல் நாள் விசாரணையின்போதே ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நீதிமன்றத்தில்இருக்க வேண்டியது அவசியமா என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஆச்சார்யா, இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் 236(2)வது பிரிவின்படி இடமாற்றம்செய்யப்பட்ட விசாரணை தான் என்ற ஜோதியின் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். இதனால் அவர்கள் நேரில்ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றார்.
நீதிபதி பேசுகையில், ஜெயலலிதா, சசிகலாவிடம் இருந்து கைப்பற்றப்பட்டு கர்நாடக அரசுக் கருவூலத்தில்வைக்கப்பட்டுள்ள பொருட்களை (வைர, தங்க, வெள்ளி நகைகள்) பார்க்க இரு தரப்பு வழக்கறிஞர்களும்விரும்புகிறீர்களா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஜோதி, அதற்கு அவசியமில்லை. ஆனால், அந்தப் பொருட்களில் சில பின்னர்சேர்க்கப்பட்டவை என்று சந்தேகப்படுகிறோம். அவை ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்டவை அல்ல.ஜெயலலிதாவின் நகைகளைப் பொறுத்தவரை நாங்கள் முன்பே அதன் பட்டியலைத் தந்துவிட்டோம். அவற்றுக்குசொத்து வரியும் கட்டியிருக்கிறோம்.
ஜெயலலிதா தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர். 136 படங்களில் நடித்தவர். நகைகள் எல்லாம் அவர்சினிமாவில் நடித்து வாங்கியவை. ஆனால், இந்த நகைகளில் சேர்க்கப்பட்டுள்ள சில புதிய நகைகளின் பட்டியல்குறித்து ஏற்கனவே நாங்கள் சந்தேகம் கிளப்பியுள்ளோம். அவை பின்னர் சேர்க்கப்பட்டவை என்று கருதுகிறோம்என்றார் ஜோதி.
தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜீனசேனன் வாதாடுகையில்,
தினகரன் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பதால் அவரால் நேரில்ஆஜராக முடியவில்லை. எனவே அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றார். மேலும் ஜெயலலிதாமீதான சொத்துக் குவிப்பு வழக்குடனேயே தினகரனின் வழக்கையும் (வருமானத்தை மீறி லண்டனில் ஹோட்டல் வாங்கியது)சேர்த்து நடத்த வேண்டும் என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதி பச்சேபுரா, இது குறித்து வரும் 28ம் தேதி விசாரிக்கிறேன். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர்தனது கருத்தைத் தெரிவிக்கலாம் என்றார்.
தொடர்ந்து ஜீனசேனன் பேசுகையில், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள இளவரசியின் மகளுக்கு சமீபத்தில் இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் மகளுக்குத் துணையாக அவர் சென்னையில் இருக்க வேண்டியுள்ளது. இதனால் அவரும்இன்று நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றார்.
ஜோதி பேசுகையில், ஜெயலலிதா-சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்குடனேயே தினகரன் மீதான லண்டன் ஹோட்டல்வழக்கையும் சேர்த்திருக்கலாம். ஆனால், தனியாக குற்றப் பத்திரிக்கை (திமுக ஆட்சியில்) தாக்கல் செய்துவிட்டனர். இந்தவழக்கில் சட்டத்தைவிட அரசியலே பெரிதாக இருக்கிறது என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதி பச்சேபுரா, எனக்கு அரசியல் தெரியாது என்றார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா பேசுகையில், இந்த வழக்கின் சாட்சிகளின் வாக்குமூலம் அடங்கிய ஆவணங்களைத் தரவேண்டும். அப்போது தான் எத்தனை சாட்சிகளை மீண்டும் மறு விசாரணைக்கு அழைப்பது என்பது குறித்து தீர்மானிக்க முடியும்என்றார்.
அதை ஏற்ற நீதிபதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்துவிலக்களித்தார், மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
ஆனால், தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்களை தாங்கள் படிக்க போதிய அவகாசம் வேண்டும்என ஜோதியும், தினகரனின் வழக்கறிஞர் ஜீனசேனனும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற நீதிபதி விசாரணையை 28ம் தேதிக்குஒத்திவைத்தார்.
தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தபோது 76 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர், வைர, தங்க, வெள்ளி நகைகள் தவிரசொகுசு பஸ் உள்பட 3,000 பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
முன்னதாக இன்று ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தால் அவருக்கு பாதுகாப்பு வழங்க மாநில, மத்திய ரிசர்வ் போலீஸ்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. குண்டு துளைக்காத காரும் தயாராக வைக்கப்பட்டிருந்தது. தேவைப்பட்டால்ஜெயலலிதா ஓய்வெடுக்க அரசு விருந்தினர் இல்லமான குமாரகிருபாவும் தயார் செய்யப்பட்டது.
ஜெயலலிதா வர வாய்ப்பிருப்பதாகக் கருதி சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான கர்நாடக, ஒசூர் அதிமுகவினரும் பொதுமக்களும் திரண்டிருந்தனர். சின்ன எம்ஜிஆர் சுதாகரன் (இவரை இப்படித்தான் அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர்)மட்டுமே வந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபின் கஞ்சா கேஸில் கைது செய்யப்பட்ட சுதாகரன், அதன் பின் போயஸ் தோட்டத்தில்இருந்து விலக்கியே வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications