சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரசார் கோஷ்டி மோதல்
சென்னை:
தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்புத் தலைவி டாக்டர் காயத்ரி தேவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் தலைவி விமலாகணேசனின் ஆதரவாளர்கள் (ஜி.கே.வாசன் கோஷ்டி), மகளிர் காங்கிரஸ் அலுவலகத்தைப் பூட்டி போராட்டம் நடத்தியதால்சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் காங்கிரஸ் தலைவியாக இதுவரை இருந்து வந்த விமலா கணேசனுக்குப் பதில், புதிய தலைவியாக டாக்டர் காயத்ரி தேவிசமீபத்தில் மேலிடத்தால் நியமிக்கப்பட்டார். ஆனால் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரப்பூர்வ தகவல்ஏதும் வரவில்லை என்று தெரிகிறது.
இந் நிலையில் ஜி.கே.வாசன் தன்னை தொடர்ந்து அவமதிப்பதாகவும், மகளிர் காங்கிரஸ் தலைவியாக தன்னைப் பொறுப்பேற்கவிடாமல் தடுப்பதாகவும், அலுவலகம் ஒதுக்காமல் தவிர்ப்பதாகவும் நேற்று செய்தியாளர்களிடம் சரமாரி புகார்களைக் கூறினார்காயத்ரி தேவி.
இது வாசன் கோஷ்டியைச் சேர்ந்த விமலா கணேசன் ஆதரவாளர்களை கொந்தளிக்கச் செய்தது. இன்று காலை விமலா கணேசனின்ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு திரண்டு வந்தனர். அங்குள்ள மகளிர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டனர்.
வாசனிடம், காயத்ரி தேவி மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவரை சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைய விட மாட்டோம்என்று அவர்கள் கோஷமிட்டனர்.
காயத்ரி தேவியை, முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன்தான் தூண்டி விடுகிறார் என்றும் அவர்கள் ஆவேசமாக கூறினர்.
மகளிர் காங்கிரஸைச் சேர்ந்தவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் சத்தியமூர்த்தி பவனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்!












Click it and Unblock the Notifications